Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறப்பட வேண்டும்..!

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திகதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டம் சார்ந்து முஸ்லிம்கள் சார்பாக எவரும் போட்டியிட முன்வராத நிலையினை இதுவரை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் அமைப்பாளர் கருத்து வெளியிடுகையில் “யாழ்ப்பாணத்திற்கான வேட்பாளர்கள் குறித்து எம்மிடம் தீர்மானங்கள் இருக்கின்றன ஆனால் நாம் தனித்தா அல்லது அரசுடன் இணைந்த போட்டியிடுவது என இதுவரை தீர்மானிக்கவில்லை இதன் காரணத்தினால் எமது வேட்பாளர் விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்தார்” 

அகில இங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாள் அல்-ஹாஜ் அமீன் கருத்து வெளியிடுகையில் “ யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பிரதிநிதியொருவரைப் பெற்றுக்கொள்வதில் ஐயப்பாடுகள் நிலவுவதால் குறித்த தேர்தலில் தாம் பங்கெடுக்காமல் விடுவதன் மூலம் முஸ்லிம் பிரதிநிதியின் தெரிவை உறுதிப்படுத்த முடியுமா என சிந்திபதாகவும், இதே நிலைப்பாட்டினை அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் அவர்களும் கொண்டிருப்பதாகவும், இன்ஷா அல்லாஹ் எமது உத்தியோகபூர்வ முடிவு எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய்ஸ்தர் ஒருவர் கருத்து வெளியிடுகையில் யாழ் முஸ்லிம் பிரதிநிதியொருவர்ர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட வேண்டும் என்பதில் கருத்து ரீதியான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன, இருப்பினும் இதுவரை அவ்வாறு போட்டியிடுவது யார் என்பதை அடையாளபடுத்த முடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண முஸ்லிம்களை மையப்படுத்து பொதுவான சுயேட்சை அபோட்சகர் ஒருவரை நியமித்தல் தொடர்பில் ஒரு சில கருத்துகள் முன்வைக்கப்பட்டபோதிலும் இதுவரை அவ்வாறான தீர்மானமும், நிலைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அறியக்கிடைக்கின்றது. ஈழ மக்கள் ஜனநாயக முன்னனியிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளர் களமிறங்கும் சாத்தியம் குறைவாகவே இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனாநாயக முன்னனியில் யாழ் முஸ்லிம் பிரதிநிதி சகோ. ஷரபுல் அனாம் அவர்கல் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் யாழ் முஸ்லிம் பிரதிநிதி குறித்து உறுதியான எவ்வித நிலைப்பாடுகளும் அரசியல் கட்சி மட்டங்களிலும், சமூக மட்டத்திலும் மேற்கொள்ளப்படவில்லை. என அறியக்கிடைக்கின்றது.

2 comments:

  1. வடக்குல நடந்ததையும், நாட்டுல நடக்குறதையும் பாத்தா இன்னமும் நமக்கு தேர்தல்ல நம்பிக்கையிருக்கா? எவனுகள நம்பி வோட்டுப் போடுற? சோனியையா? காபிரையா? எல்லானும் ஒண்டுதான். கடைசியில நமக்கு ஆப்புத்தான்.

    ReplyDelete
  2. jaffnavil kaatutharpar seaium suyanala arasiyalvaathihal ullarhal.mihaviraivil thalikaatuvarhal.

    ReplyDelete

Powered by Blogger.