துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் ஜனாஸா உறவினர்களிடம் கையளிப்பு (வீடியோ)
கொழும்பில் 04-07-2013 காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த காதர் மொஹித்தின் அஹமட் அஸ்மீர் எனப்படும் சந்தேகநபரின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நீதவான் விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் இவர் தந்தையாவார்.

ithu oru seithi allava? ean kollappattar endru ethuvum sollappadavillaye? pallivaasalukku munnaaal thahatha seyal endra seithiyum ippadiththaan ullathu
ReplyDeleteCAN ANYONE UPDATE THE REASON FOR THE OPERATION (SHOOTING) PLEASE..?
ReplyDelete