Header Ads



முஸ்லிம் பாடசாலையில் முளைத்த புத்தர் சிலைக்கு நான்தான் காரணம் - அபயவன்ஸ தேரர்

என்னிடம் மத வேறுபாடுகளோ சாதி வேறுபாடுகளோ ஒரு போதும் கிடையாது. முஸ்லிம்கள் எப்போதும் எனது நண்பர்கள். சிலையை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தர் சிலையை நான்தான் வைத்தேன் என வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ஸ அலங்கார தேரர் தெரிவித்தார்.

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய மைதானத்தில் நேற்று திடீரென தோன்றிய புத்தர் சிலை தொடர்பாக கேட்ட போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்.

"புத்த ஜயந்தி விகாரைக்குறிய காணியில் சிலை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தர் சிலையை நான்தான் வைத்தேன். 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06ஆம் திகதி வி.ஜேமிஸ் அபுகாமி என்பவரால் புத்த ஜயந்தி விகாரைக்கு இரண்டு ஏக்கரும் பதினேழு பேர்ச் அடங்கலான காணியை அன்பளிப்புச் செய்திருந்தார்.

கடந்த யுத்த காலத்தின் போது விகாரையின் காணிகளை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சிலரால் விகாரையின் காணிகள் பிடிக்கப்பட்டு தற்போது பாடசாலை மைதானம் என்று குறிப்பிடப்படும் காணி அடங்களாக இரண்டு ஏக்கருக்கும் குறைவான காணியே உள்ளது.

இந்த காணி விவகாரம் தொடர்பாக வாழைச்சேனை நீதிமன்றில் வழக்கு நடைபெற்றபோது தனக்கு தமிழ் தெரியாது என்றும் இந்த வழக்குத் தொடர்பாக தமிழில் எந்தவிதமான அறிவித்தல்களும் வழங்காமல் சிங்களத்தில் மொழி பெயர்த்து அனுப்புமாறும் எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் என்ன நடைபெற்றுள்ளது என்று எனக்கு எதுவும் தெரியாது. 

தீர்ப்புக் கிடைத்து விட்டது என்று பாடசாலை நிருவாகமோ வேறு எவருமோ என்னிடம் கூறவில்லை. இந்த புத்தர் சிலையை நான்தான் வைத்தேன். இது முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடாக எவரும் கருதக் கூடாது. புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியை மீட்கும் போராட்டமே"என்றார்.

இது தொடர்பாக பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியால அபிவிருத்திக் குழு செயலாளர் எஸ்.எம். செயினுதீனை தொடர்புகொண்டு வினவியபோது,

"இந்த மைதானக் காணி தொடர்பாக வாழைச்சேனை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு அமைய நீதிமன்றத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக விகாரையின் நிர்வாகம் அத்துமீறி அக்காணியில் புத்தர் சிலை வைத்துள்ளது.

பாடசாலை நிர்வாகத்தை சிவில் வழக்கு தாக்கல் செய்யும்படி கூறியதற்கிணங்க சட்டத்தரணிகளுடன் சிவில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம்" என்றார்.

5 comments:

  1. இதுவும் ஒரு மன நோயாளி இதுபோன்ற எத்தனையோ மன நோயாளிகள் தற்போது நாட்டில் உள்ளனர் இவர்களது பிரச்சினை என்னவென்று புரிகின்றதா.

    ReplyDelete
  2. உங்களுக்கு தமிழ் தெரியாததால் சில நிலப்பரப்பே போய்வுள்ளது, தெற்கிலும், மைத்திய பிரதேசம் மற்றும் ஏனைய அதிகமான பிரதேசங்களில் சிங்கள மொழி தெரியாமல் எத்தனையோ காணி, தொழில், அரச தொழில், பல உண்மைகள் அழிந்துள்ளன. இப்போதாவது உணருங்கள் எமது நாட்டில் அதிகமாக பேசக்கூடிய இரு மொழிகளையும் அரச மொழியாக்கி அமுல்படுத்த. இல்லாவிட்டால் இன்னும் பல உண்மைகள் மறைந்துபோக நேரிடும்.

    ReplyDelete
  3. So why army providing security there, today I have seen this while I was coming from Colombo

    ReplyDelete
  4. mr therar pls try to be human

    ReplyDelete
  5. Why you do not know that Army also with them.

    ReplyDelete

Powered by Blogger.