Header Ads



கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு முன் பொதுபல சேனா ஆர்ப்பாட்டம்

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில்  இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடாது என வலியுறுத்தி சுமார் 1000 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட பொதுபல சேனாவின் ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் நடைபெற்றது.

இதனால்இ கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையான காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்திய தூதரகத்திற்கு முன் சுலோகங்களை தாங்கியபடி கோஷங்களை எழுப்பிய பொதுபல சேனா, இந்திய தூதரக அதிகாரிகளிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துவிட்டுச் சென்றுள்ளனர். 

1 comment:

  1. The BBS is an unofficial Governemt Agent, International community well aware of this.

    ReplyDelete

Powered by Blogger.