பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் பொதுப் போக்குவரத்து வேவையிலேயே அதிகம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
பெண்கள் மீதான 95 வீதமான துஷ்பிரயோகங்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் இடம்பெறுவதாக உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது
அவ்வமைப்பு இது குறித்து மேலும் சுட்டிக்காட்டுவதாவது,
இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படுகிறார். 2011ஆம் ஆண்டில் 60 வீதமாக இடம்பெற்ற பெண்களுக்கெதிரான துஷ்பிரயோகங்கள் 2013ஆம் ஆண்டில் 80 வீதமாக அதிகரித்துள்ளது.
வீடுகளில் இடம்பெறுகின்ற அடக்குமுறை செயல்களில் உலகளாவிய ரீதியில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. பெறும்பாலான துஷ்பிரயோகங்கள் பொதுப் போக்குவரத்துச் சேவைகளிலேயே அரங்கேற்றப்படுகிறது. பெண்கள் மீதான 95 வீதமான துஷ்பிரயோகங்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் இடம்பெறுவதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது
இதேவேளை. இலங்கையில் 2012ஆம் ஆண்டில் 1636 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக ஆய்வொன்று குறிப்பிடுகிறது.
இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்களில் 86 வீதமானோர் 16 வயதுக்குக் கீழ்பட்டவர்கள் எனவும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 15 ஆயிரம் வழக்குகள் நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாய்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

Pengalukku chuzanthiram veyndum enru kaththufavargal muzalil
ReplyDeletepengal mariyazaiyudan nadamaadakkoodiya choolalai uruvaakka
vakai cheyya vendum.Pozuppoakkuvaraththu mattumalla,pengal
kaadaiyargalin nayyaandigalukkaalaagamal veliyil thalai kaattavey
mudiyazu.Izu oru kalaachchaaramagavey neendakaalamaagave
nadandhu varuginrazu.Visheshamaga ilam yuvazikalukku valai
virikkum idamakaththan veettukku veliyey engupaarthalum
irukkinrazu,azilum pozuppoakkuvaraththukkal kaamukarkalin
thalaimai aluvalakangalaakavey neendakaalanthottu irundhu
varukinrana.Pozupp poakkuvarththai inthak kaamukarkalidamirundhu
meettaaley paazi maniza mariyazai meendu manizan manizanai
manizanaga gowravaththudan paarkkum nilai nichchayam uruvaagum.
Manizanin urimaikaum mariyazaiyum kolaicheyyappadum oru
thalmmakaththaan inthap poakkuvaraththuthurai iyangikinrazu enpazu
oru paariya unmai.
பொது பல சேனாவில் உள்ளவர்களும் போக்குவருத்து அதிகார சபையில் தான் வேலை செய்கிறார்கள்.....
ReplyDeleteThayavucheyzu "urimaikaum" enpazai "urimaikalum" enru vashikkavum.
ReplyDeleteNanri.