இப்தார் நிகழ்வை எனது வாழ்நாளில் மறக்க முடியாது - பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே
(முஹம்மது றினாஸ்)
புல்மோட்டை வரலாற்றில் முதன்முறையாக சுமார் ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்வு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த உபசாரத்தில் ஆண் ,பெண் , சிறுவர்கள் என, பல்லின மக்களும் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இனமத பேதம் ஆகியவற்றை கடந்து ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்வில்
பங்கேற்றதோடு தனது வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக கருதுவதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளரும் பொருளாதார பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமே தனது பாரியார் சகிதம் வருகை தந்து குறிப்பிட்டார்.\\

நாடெங்கும் சாந்தி சமாதானம் ஏற்பட அல்லாஹ் இப்தார் நிகழ்ச்சிகளை காரணமாக ஆக்குவானாக.
ReplyDeleteAaahaa 1000 people in the Ifthar Programe.
ReplyDeleteWhat a nice Idea is this...!!!
You will get good marks from His Ex.President.
Election period works and tasks are very nice.
If an Ifthar given you can rob votes from the innocent people.
The name of Ifthar they play well.
where's their resettlements and rights and freedom. Give those first.