Header Ads



'போர்த்துக்கேயர் காலத்திற்கு பின் தற்போதைய அரசாங்கமே முஸ்லிம்களை ஒடுக்குகிறது'

அரசாங்கத்தை தோற்கடிக்கவே முஸ்லிம்கள் விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். போர்த்துக்கேயர் காலத்தில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தற்கால அரசாங்கமே கூடுதலாக முஸ்லிம்களை ஒடுக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டுமொரு தடவை முஸ்லிம் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்றே மாகாணசபைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் ஹக்கீம் இணைந்துகொள்வார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாற தனித்து போட்டியிடும் உத்தியை ஹக்கீம் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது யாருக்கும் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். gtn

3 comments:

  1. It's defenetly true. The SLFP do this tric to abolish Muslim Community Structures in all matters around the Island, threfore some of our partners from politicians accompany with them.

    ReplyDelete
  2. 100 வீதம் உண்மை எனவே முஸ்லிம்கள் இவரைப் போன்ற தனிமனிர்களை பாராட்டுவோம் அனைத்து கச்சிகளையும் புறக்கணிப்போம.

    ReplyDelete

Powered by Blogger.