பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குள் போலி நாணயத்தாள்கள் - றோ உளவுப் பிரிவு விசாரணை
(UN) போலி நாணயத்தாள்கள் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய நாணத்தாள்களே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் போலியாக அச்சிடப்பட்ட இந்திய ரூபாய்கள் இலங்கையில் மாற்றப்படுகின்றது.
இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்ட 500 ரூபா இந்திய நோட்டுக்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர் ஒருவருடமிருந்து 40 போலி 500 நோட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இந்திய போலி நாணயத்தாள் விநியோகம் தெடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைகளின் முதல் கட்டமாக ஓரு மில்லியன் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இது குறித்து இந்தியாவின் றோ உளவுப் பிரிவினரும் இந்த போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். -

Post a Comment