Header Ads



சவூதி அரேபியாவின் ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டம் (படங்கள்)


சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 2019-ம் ஆண்டுவாக்கில் இந்த ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும். 

ஈராக்கில் பிறந்து தற்போது இங்கிலாந்து நாட்டில் கட்டிடக் கலை வல்லுனராக விளங்கும் சகா ஹடிட், இந்த ரயில் நிலையங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்ட திட்ட வரைபடத்தை வரைந்துள்ளார். 180 கி.மீ. தூரம் கொண்ட இந்த மெட்ரோ ரயில் திட்டம் துபாய் மெட்ரோவைவிட பெரியதாகும்.

 ஆறு வழி போக்குவரத்தைக் கொண்டதாக அமையவுள்ள இந்தத் திட்டம் உலகின் மிகப் பெரிய போக்குவரத்து முயற்சி என்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று அரியத் அபிவிருத்தி ஆணையத்தின் தலைவரான இப்ராஹிம் பின் முகமது அல் சுல்தான் கூறினார். ஆறு மில்லியன் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த இந்தத்திட்டம் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்றும் அவர் கூறினார். 


No comments

Powered by Blogger.