மஹியங்கனை பள்ளிவாசலும், ஜனாதிபதியும்..!
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் தன்னிடம் முறைப்பாடு செய்யவில்லை என கவலை வெளியிட்டிருந்தார். இதனை முழு முஸ்லிம் சமூகமும் மறந்திருக்காது.
இந்நிலையில் மிக அண்மையில் மஹியங்கனை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து மற்றும் பள்ளிவாசலில் பன்றியின் இரத்தம் ஓட்டப்பட்டிருந்தமை குறித்து நீர்கொழும்பில் நடைபெற்ற புதிய நீதிமன்ற கட்டட திறப்பு நிகழ்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஸவின் நேரடி கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதனை ரவூப் ஹக்கீமின் சகோதரர் டாக்டர் ஹபீஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தியிருந்தார்.
பின்னர் கண்டியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் பங்கேற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன் மற்றும் அதாவுல்லா ஆகியோர் மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேசினர். இதனை குறித்த நிகழ்வில் பங்கேற்ற முஸ்லிம் அமைச்சர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மஹியங்கனை பள்ளிவாசல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது. பள்ளிவாசல் இதுவரை திறக்கப்படவேயில்லை.
இதனையடுத்து மூடப்பட்டுள்ள பள்ளிவாசல் விவகாரம் குறித்து மூத்த அமைச்சர் பௌஸி, அமைச்சர் நிமால் சிறிபால டீ.சில்வா மற்றும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் பகிரங்கமாகவும், தனிப்பட்டவகையிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தியிருந்தார்.
அந்தவகையில் இங்கு மிகத்தெளிவாக விளங்குவது யாதெனில் மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதேயாகும்.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் போன்று எனக்கு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் அதுபற்றி கூறவில்லையென குறிப்பிட்டதை போன்று இம்முறையும் ஜனாதிபதி தனது பொறுப்பிலிருந்து தப்பிவிட முடியாது.
மூடப்பட்டுள்ள மஹியங்கனை பள்ளிவாசல் குறித்து முஸ்லிம் சமூகம் நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியிடமிருந்து மிகவும் பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறது...!!

உண்மையாக இருக்கலாம், நம்மட அரசியல் வாதிகள் எல்லாம் இவன்கலுக்கிட்ட பிட்ச்ச வான்கித்தின்னுரா கூட்டம்தானே!(கோட்டா , லயிசன்ஸ்,சொந்தகாரனுக்கு நல்ல ஜோப் என்று உள்ள எல்லாம் முடிச்சாச்சு ) . எப்படி கொம்ப்லையின் பண்ணுறது?.இனி கைய கட்டிகொண்டு இருக்க வேண்டியதுதான்.
ReplyDeleteயார ஏமாத்த பாக்குறீங்க .... ஹிட்லரை விட புத்திசாலியான தலைவனல்லவா நமது ராஜபக்ச
ReplyDeleteமகியங்கன விவகாரமாக பதில் சொல்ல விவேகமான பதிலை தயார்செய்து வைத்திருப்பாரே..........
இன்னுமா புரியல
"ஆட்டுவதும் அவனே கிள்ளுவதும் அவனே "
முதுகெழும்பில்லாத அரசியல் வாதிகளே
ReplyDeleteநம் முஸ்லிம் அரசியல்வாதிகள்
இதுவே சொந்தப் பரச்சினயாயின் எப்பவோ
தீர்ந்திருக்கம்
Aduttha BBS in Kootam Mahiyanganayil allawa, aduttha maadham 1m thihadhi iwarukku welinattu payanam irukkume?,,,,,,,
ReplyDeleteஜனாதிபதி எந்த அரசியல் தலைவரும் சொல்லவில்லை என்று சொல்கிறார் அப்படி நீங்கள் சொல்லியிருந்தால் ஏன் இன்னும் பட்டம் பதவியில் இருக்குறீர்கள் வெக்கம் ரோசம் சூடு சொரணை ஏன் இன்னும் வரவில்லை
ReplyDeleteமுஸ்லிம்கள் செய்யும் சட்டவிரோத செயல்களை எல்லாம் சட்ட மயப்படுத்தும், நியாயப்படுத்தும் அதிகாரம் முஸ்லிம் அரசியல்வாதிகளது கைகளில் இன்றில்லை. மகியங்கனைப் பள்ளிவாயல் விவகாரம் சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றால், குறித்த பள்ளிவாயல் நிர்வாகத்தினர்; பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்காக கலாச்சார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றில் இருந்து பெற்றுக்கொண்ட அனுமதிப் பத்திரங்களின் பிரதிகள், உள்ளூராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டட நிர்மான அனுமதிப்பத்திரப் பிரதிகள், வக்ப் செய்யப்பட்ட காணி உறுதியின் பிரதி, வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பதிவிலக்கம், பள்ளிவாயல் ஆரம்பம் முதல் நிகழ்வாண்டு வரையுமான பரிபாலன சபைகள் வக்ப் சபையில் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் என்பனவற்றை ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் ஊடாகச் சமர்ப்பிப்பார்களானால் மேற்கொண்டு முயற்சி செய்யும்படி கோரி முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
ReplyDeleteDont belive our hon president he came from cinema industry he can act very well
ReplyDeletebig blind guy in srilanka
Sariyana Sonninga brothers... Everything Everybody Know Before this happend but Nothing they Cant do..
ReplyDeleteLike Barking _ _ _ Dnt Bite....
kuraikkurathu..kadikkathu....
Vera vithiysame ille....
Lets see what story they got for this situation also..
Allah will Help us.. InsyaAllah.. Allahu Akber.