அம்பாரை மாவட்ட பிரதேச செயலக அலுவலர்களுக்கான 3 நாள் செயலமர்வு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அலுவலர்களுக்கான மூன்று நாள் செயலமர்வொன்று நடைபெற்றது.
அம்பாரை அரசாங்க அதிபர் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற இச்செயலமர்வை அரசாங்க அதிபர் அலுவலகமும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
முன்மொழிவு தயாரித்தல் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில்அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் திட்டமிடல் பிரிவில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள்,முகாமைத்துவ உதவியாளர்களும் கலந்துகொண'டனர்
இதில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். விமலநாதன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு இச்செயலமர்வை ஆரம்பித்துவைத்ததுடன் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ்,யூ.எல்.எம்.அஸ்கர் மற்றும்.கே.புவநேந்திரன் ஆகியோர் வளவாளர்களாகக்கலந்துகொண்டனர்.


Post a Comment