Header Ads



இணையம் மூலமாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்க வசதி

(NF) இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை  ஏற்படுத்துவதற்கு நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்கீழ் நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுகின்ற காணிகளின் வரைபடங்களை பரிசீலிப்பதுடன் ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் அவற்றின் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி அளவையியலாளர் நாயகம் பீ.எப்.பி.உதயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

www.survey.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்க முடியும் என்றும் நில அளவையியலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.