புத்தளம் - பாலாவியில் குண்டுகள் மீட்பு
புத்தளம் - பான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு வளாகத்தில் இருந்து ஐந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டிய போதே இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்கப்பட்ட 5 குண்டுகளையும் செயலிழக்கச் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
Post a Comment