Header Ads



யாழ்ப்பாண மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரம் 2 ஆயிரத்து 455 (0.4%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் தனது இறுதிக் கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இம் மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு:

பிரதேச செயலகப் பிரிவு
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
யாழ்ப்பாணம்
1760   பேர்
வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்)
 174   பேர்
தீவகம் தெற்கு
 138   பேர்
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்)
  96   பேர்
நல்லூர்
  83   பேர்
தென்மராட்சி (சாவகச்சேரி)
  59   பேர்
வலிகாமம் தெற்கு (உடுவில்)
  54   பேர்
வடமராட்சி வடக்கு
  36   பேர்   
வடமராட்சி தென் மேற்கு (கரவெட்டி)
  23   பேர்
வலிகாமம் வடக்கு
  20   பேர்
வலிகாமம் மேற்கு (சங்கானை)
  07   பேர்
வடமராட்சி கிழக்கு
  03   பேர்
தீவகம் வடக்கு
  02   பேர்
காரைநகர்
-      -
நெடுந்தீவு
-      -
                                                        
     இம் மாவட்டத்தில் மொத்தமாக 5 இலட்சத்து 83 ஆயிரத்து 378 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம் வருமாறு,

சமயம்
சனத்தொகை
வீதம்
இந்துக்கள்
483900   பேர்
82.9%
ரோமன் கத்தோலிக்கர்
 75033   பேர்
12.9%
ஏனைய கிறிஸ்தவர்கள்
 19113   பேர்
 3.3%
பெளத்தர்கள்
  2533   பேர்
 0.4%
இஸ்லாமியர்கள்
  2455   பேர்
 0.4%
ஏனைய சமயத்தவர்கள்
   344   பேர்.
 0.1%

No comments

Powered by Blogger.