பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் சூத்திரதாரிகளை அடையாளம் காணவேண்டும்
(எம்.எம்.ஏ.ஸமட்)
பள்ளிவாசல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் அவமதிப்புக்கள் நிறுத்தப்படுவதுடன் இனந்தெரியாதவர்கள் இணங்காட்டபட வேண்டுமென கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகியங்கனை நகரிலுள்ள அரபா ஜும்ஆ பள்ளிவால் மற்றும் கிராண்ட்பாஸ் தாறுள் இமாம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,
இந்நாட்டில் மூவின மக்களும் தங்கள் தஙகள் உரிமைகளுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர். வாழ்ந்தும் காட்டியுள்ளனர். ஆனால் அண்மைக்காலமாக இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கெதிராக குறிப்பாக, முஸ்லிம்களுக்கெதிராக அதிகரித்துள்ள அடக்குமுறைகள் அடக்கப்படவது அவசியம். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்றதொரு இனமில்லையென்றும் இந்நாட்டில் இருப்பது இந்நாட்டை நேசிப்பவர்கள் மற்றும் நேசிக்காதவர்கள் என்ற இரு இனம் மாத்திரமே உள்ளது என்றும் ஜனாதிபதி அடிக்கடி கூறிவருகிறார்.
ஆனால், ஜனாதிபதியின் இக்கூற்றை மதிக்காதது அவரின் கூற்றைப் புறந்தள்ளியவாறு ஒரு கூட்டம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நாட்டில் நாங்கள் வாழ வேண்டும் எங்களுக்குத் தான் இந்நாடு சொந்தம் என்று போhக்கொடி தூக்கிக்கொண்டு இந்நாட்டை நேசித்த, இந்நாட்டைக் காட்டிக்கொடுக்காது, இந்நாட்டுக்காக தியாகங்கள் செய்த, செய்து கொண்டிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்தக் கூட்டம் செயற்படுகிறது.
புனித ரமழான் மாத்தில் மகியங்கனை அறபா ஜும்ஆ பள்ளிவாலுக்குள் அத்துமீறி நுழைந்து, பள்ளிவாசலின் ஸ்தபாகர் சீனி முகம்மது ஹாஜியாரைத் தாக்கிவிட்டு, பள்ளிவாசள்லுக்கு முஸ்லிம்கள் வெறுக்கும் பன்றியின் பாகங்களை பள்ளி முழுதும் வீசியெறிந்து பள்ளிவாசலையும் புனித ரமழமான் மாதத்தையும் அசிங்கப்படுத்திச் சென்றுள்ளனர். அது மாத்திரமின்ற, புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்ககள் அமைச்சின் அனுமதிக்கமைய நிர்மானிக்கப்பட்டு திறக்கப்பட்ட கிராண்ட்பாஸ் தாருள் இமாம் பள்ளிவாசலையும் திறக்கவிடாது பேரினவாத அமைப்பொன்றின் தூண்டுதலின் பெயரில் தடுக்கப்பட்டுள்ளதுடன் அப்பள்ளிவாசல் தக்குதலுக்குள்ளாகியுமுள்ளது. இத்தகைய மிலோச்சத்தனமான நடவடிக்;கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதுமாத்திரமின்றி, இத்தகையை மதவெறியாட்டம் இனங்களுக்கிடையில் ஆரோக்கியமற்ற நிலைமையையே உருவாக்கும். இந்நிலைமை உருவாகமல் தடுக்கப்படுவது அவசியமென அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மாத்திரமின்றி எந்தவொரு இனத்தினதும் வழிபாட்டுத்தளங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் இனந்தெரியாதவர்கள் என்ற போர்வைக்குள் மறைந்துகொண்டு இனங்களுக்கிடையே முறுகலைத் தோற்றிவித்து அதில் இலாபடைய செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த இனந்தெரியாதவர்கள் இணங்காட்டப்படவேண்;டும். அதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுவதாகவும் அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் தெரிவித்தார்.
.jpg)
Maappillai Uthuman, Please ask Gotabaya to stop this nonsense first, then everything will be alright Insha Allah
ReplyDeleteyou all met the president in kandy. why didn't you tell these things in the meeting? don't fool the people?
ReplyDeleteOK, Who should do this? What are you trying to say Mr.
ReplyDeletePlease come out and talk clearly and directly. Do not try to pass the ball to someone else
Passavandiya Edam Provincial Council & President Summa Puchchandi Kaddavandam
ReplyDelete=============Kalmunai Mohamed Fowse++++++++++++
There is no racism .said MR it does means the people who ar doing such they ar not respecting the president including BBS all of them taken the rule their hands...
ReplyDeleteசாரதாரண மனிதன் விடும் அறிக்கையை போன்று ஊடகத்தில் அறிக்கைகளை விட்டுப்போட்டு ஜனாதிபதி கூப்பிட்டு உங்கள் பிரச்சினை என்ன என்று கேட்டால் எங்களுக்கு வாகனக் கோட்டா வேனும், எங்களுக்குரிய சரியான நிதி ஒதுக்கீடு சரிய கிடைக்கவேண்டும் சார்.................
ReplyDeleteஇதனை விட வேறு பிரச்சினைகள் ஒன்றுமில்லை. இந்த பள்ளி உடைப்பு, ஹராம், ஹலால் அதைப்பற்றி நாங்கள் மக்களை சம்மாளித்துக் கொள்வோம் சார்........
எங்களுக்கு கிடைக்கவேண்டியவைகளை சரியாக தரச்சொல்லுங்கள் சார்..............
ஆளுனரிடம் இதைப்பற்றி மிக தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளோம் நீங்கள் கொஞ்சம் சொன்னால் போதும் சார்....... என இவ்வாறு தங்களுக்கு கிடைக்கும் இலாபத்தை கேட்டு விட்டு வந்தவர்கள் எப்படியப்பா பசுத்தோல் போத்திய புலியைப்போல் உலாவுகின்றனர்.
இவர்களுக்கு என்னசெய்யவேண்டும். என மக்கள் நல்ல பாடம் புகட்ட முன்வரவேண்டும்.
முன்வருவார்கள். இன்ஸா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்.
பாத்து பாத்து அப்பிடியே பயந்து நடிங்கி காரியத்தைச்செய்தவங்க நாட்டைவிட்டு ஓடிடப்போறானுங்க.
ReplyDelete