நாடு பூராகவும் தராவிஹ் தொழுகை (படங்கள்)
(பழளுல்லாஹ் பர்ஹான்)
ஹிஜ்ரி 1434 ரமளான் மாத தலைப்பிறை தென்பட்டதையடுத்து நாடு முழுவதிலுமுள்ள மற்றும் சர்வதேசம் எங்குமுள்ள பள்ளிவாயல்களில் இரவு நேர தராவீஹ் தொழுகை இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, மருதமுனை,கல்முனை சாய்ந்தமருது,சம்மாந்துரை உள்ளிட்ட முஸ்லிம் பிதேசங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இஷாத்தொழுகையின் பின் இரவு நேர தராவீஹ் தொழுகை இடம்பெற்றதுடன் விசேட பயான் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பள்ளிவாயல்களில் இரவு நேர தராவீஹ் தொழுகையை தொழுவதற்காக ஆண்கள் பெண்கள் அடங்கலாக கனிசமான தொகையினர் வருகை தந்திருந்தனர்.முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடியிலும் சகல பள்ளிவாசல்களிலும் இரவு நேரத் தொழுகை நடாத்தப்பட்டது. ரமளானை நல்ல முறையில் கழிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment