வைத்தியர் சமீமுக்கு பாராட்டு..!
(எஸ்.அஷ்ரப்கான்)
வைத்தியத்துறையில் சாதனை படைத்த மருத நிலத்தின் மகரந்தமாக மணம் பரப்பிக்கொண்டு ஏழை மக்களின் பிணி போக்கி சந்தேசப்படுத்திக்கொண்டு தானும் சந்தோசப்படுகின்ற வைத்தியர் சமீம் எமது பிரதேசத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே கூறவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது,
தற்போது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேவை செய்துவரும் வைத்தியர் சமீம் வைத்தியத்துறையில் தன்னை அரப்பணித்து சேவையாற்றிவருவது பாராட்டத்தக்கதாகும். இன்னும் சிறப்பாக இவரது சேவையை பெற்றுக்கொள்ள அவரை கௌரவப்படுத்தி பயன்படுத்திக்கொள்வது எமது பிரதேச அரசியல்வாதிகளினதம் பொதுமக்களினதும் தலையாய கடமையும், பொறுப்புமாகும்.
வைத்தியர் சமீம் தன் கடமைக்கு அப்பால் சென்று மக்கள் சேவகனாக தன்னை அரப்பணித்திருப்பது பாராட்டத்தக்கதும் புகழப்படவேண்டிய விடயமுமாகும். என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனெனில் வளப்பற்றாக்கறையும், ஆளணிப்பற்றாக்குறையும் இருந்தும் இப்பிரதேசத்து ஏழை மக்களின்நலன் கருதி பக்கத்து வைத்தியசாலைகளின் கரவிகளையெனும் உதவிக்குப்பெற்று மிகச் சிரமத்துிடனும் வேலைப்பளுவுடனும் பல வியக்கத்தக்க சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்ததானது இதற்குச்சான்று பகர்கின்றது.
சிலவேளை வேறு வைத்தியர்களாக இருந்தால் இங்கு போதிய வைத்திய உபகரணங்கள் சாதனங்கள் இல்லாமல் இருப்பதனால் அதனை சுட்டிக்காட்டி சத்திர சிகிச்சைகளை கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கு அனுப்பிவைத்து தமது கடமைகளை முடித்த விடுவார்கள்.
ஆகவே, இவ்வாறான சேவை மனப்பான்மையுடைய வைத்தியர் சமீம் போன்றவர்களை பாராட்டுவதும் ஒத்துழைப்பதும், அவர்களிடம் புதைந்து கிடக்கின்ற திறமைகளை வெளிக்கொண்டுவந்த பொதுமக்களுக்கு இன்னும் சிறப்பான வைத்திய சேவைகளை பெற்றுக்கொடுக்க பிரதேச அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பிரதேவாசிகளும் அரசியல் இலாபங்களுக்கப்பால் செயலாற்ற முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்
என்றும் ஸலாம் குறிப்பிட்டார்.

WISH YOU ALL THE BEST TO DR sameem and Jazakallah kharan for his service.
ReplyDeleteWhen you do thousand successful surgeries some people only appreciate the doctor But when he do the one mistake everybody criticize the doctor .anyway ALLAH help you, that is enough.
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக..
ReplyDeleteDr. Sameem இன் சேவையைப்பார்தாவது சிலர் தாமும் தம்மைத்திருத்தித்கொளவார்களா?
MashaAllah good to hear About DR Sameem's dedicated works, wish you all the best!
ReplyDeleteஅப்பட்டமான பொய் இவர் பணம் தின்னிக் கழுதை என்றால் அது மிகையாகாது இவரது சேவை பட்டி பிரதேச மக்களிடம் கேட்டால் தெரியும். வைத்திய சாலைக்கு வரும் நோயாளிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து பணம் பறிப்பதிலேயே கவனமாக இருப்பவர் இவரை இவ்வாறு பாராட்டி கவ்ரவிப்பது உண்மையான சேவை மனப்பான்மையுடன் ஏழைகளின் நிலைமை அறிந்து இலவசமாக சேவை புரிபாவர்கள் இவரது ஊரில் இருக்கிறார்கள் அவர்களைப் பார்த்தாவது இவர் ஏழைகளின் வயித்தில் அடிப்பதை நிறுத்த வேண்டும். எவ்வளவுதான் இஸ்லாம் கதைத்தாலும் அதனை நடைமுறையில் காட்ட வேண்டும். இவரின் செயல்களால் இவரிச்செர்ந்தவர்களும் மிகவும் சங்கடத்திற்கு உட்பட்டிருப்பதை இவர் அறிவாரா? இப்பொழுது இவர் ஊரில் கோடீஸ்வரர் பல சொத்துக்களுக்கு சொந்தக்காரர். உண்மையான சேவை செய்பவர்களை மட்டும் பாராட்டுங்கள்
ReplyDeleteAlhamdulillah
ReplyDeleteBarakallahu feekum Doctor.
Allah will increase your knowledge more and more