Header Ads



பாலமுனைப் மாணவர்களுக்கு 5 நாட்கள் இஸ்லாமிய பயிற்சிப் பட்டறை

(பி. முஹாஜிரீன்)

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாசபை - பாலமுனை கிளையின் எற்பாட்டில் பாலமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 09, 10 வகுப்புகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு 05 நாட்கள் நடைபெற்ற இஸ்லாமிய பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் பரிசளிப்பு விழாவும் இப்தார் நிகழ்வும் புதன்கிழமை (24-07-2013) நடைபெற்றது.

சவூதி அரேபிய கல்வி மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச கலாசார மையத்தின் அணுசரனையில் பாலமுனை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் யூ.எல். இப்றாஹீம் தலைமையில் பாலமுனை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகவும், பாலமுனை ஜம்மியதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யா (ஜெஸ்கா) நிறுவனத்தின் தலைவரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பத்வா குழுவின் செயலாளருமான அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஸிம் சூரி (மதனி) விசேட அதிதியாகவும், அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை அதிபர் அஷ்ஷெய்க் எம். எஸ் அப்துல் ஹபீழ், மாவட்;ட விவசாயப் பயிற்சி நிலைய உதவிப் பணிப்பாளர் வை.எம்.நியாஸ் ஆகியோர் உட்பட பலர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 60 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன், பயிற்சிப்பட்டறையின் இறுதியில் நடைபெற்ற பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 10 மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் கலந்து கொண்ட அனைத்த மாணவர்களுக்கும் சான்றிதழகளும் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் மார்க்கச் சொற்பொழிவும் இப்தார் நிகழ்வும் நடைபெற்றன.




No comments

Powered by Blogger.