முஹம்மதி ஜும்ஆப்பள்ளிவாசல் குறைபாடுகளை நீக்க ஹரீஸ் எம்.பி. உறுதி
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸுக்கும் கல்முனை முஹம்மதி ஜும்ஆப்பள்ளி வாயல் நிருவாகிகளுக்குமிடையுலான சந்திப்பொன்று நேற்றிரவு நடைபெற்றது.
பாராளுமன்ற உருப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் முஹம்மதி ஜும்ஆப்பள்ளி வாயலில் காணப்படும் உடனடித்தேவைகள் தொடர்பாகவும் கல்முனைப்பிரதேச அபிவிருத்திதொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன் பள்ளி வாயலிலின் தேவைகள் தொடர்பான மகஜர்ஒன்றும் கையளிக்கப்பட்டது. முஹம்மதி ஜும்ஆப்பள்ளி வாயலில் காணப்படும் மிகமுக்கியமான குறைபாடுகள் சிலவற்றை உடனடியாக நிவர்த்திசெய்து தருவதாக பாராளுமன்ற உருப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நிருவாகிகளிடம் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் முஹம்மதி ஜும்ஆப்பள்ளி வாயலில்தலைவர் அல்ஹாஜ்.ஏ.செய்னுலாப்டீன்.செயலாளர்.கே.எல்,சுபைர் உட்பட நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டனர்
.jpg)
Is it true? We can't believe it until you finish it's shortcomings.
ReplyDelete