பாடசாலைகளிலிருந்தே ஆண்மீக அறிவு ஊட்டப்பட வேண்டும் - ஆரிப் சம்சுடீன்
முன் பிள்ளைப் பருவப் பாடசாலைகள் அடிப்படைத் தரங்களைக் கொண்டதாக அமையபெறுவது அவசியம். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டார்.
சமாதான முன்பள்ளியினால் கல்முனைக்குடி அல்பஹ்ரியா மகா வித்தியாலத்தில் நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது-
முன்பிள்ளைப் பருவத்திலுள்ளோர் முன் பள்ளிகளினூடாகப் தமது முன்பள்ளியின் சூழல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச் சூழலை ஆராய்ந்து, நற்குணங்கள் பழகி, அழுத்தங்கள் இன்றிச் சந்தோஷமாக எதிர்கால கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையான பின்னணியினைப்; பெற்றுக்கொள்கின்றனர். இந்தப் பின்னணியானது இப்பிரதேசத்திலுள்ள முன்பள்ளிகளினால் வழங்கப்படுவது அவசியம். இதற்கு முதன்மையாக இம்முன்பள்ளிகளின் சூழல் மகிழ்ச்சி கரமானதாக அமையப்பெற வேண்டுமென நினைக்கின்றேன்.
ஒரு முன்பள்ளியானது எத்தகைய அடிப்படைத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டுமென கல்வி அமைச்சு நிர்ணயம் செய்துள்ளது. இப்பிரதேசங்களிலுள்ள முன்பள்ளிகள் அந்தத் தர நிர்ணயத்துடன் அமைப்பெற்றிருக்க வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.
தரம் ஒன்றுக்கு பிள்ளளைகள் பாடசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக இம்முன்பள்ளிகளிலே கற்றலுக்காக ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். இப்பருவப் பிள்ளைகள் சந்தோஷமான சூழலில் ஆயத்தப்படுத்தப்படுகின்றபோதுதான் அவர்கள் மனங்களில் கல்வி தொடர்பாகவும் எதிர் காலங்களில் தாங்கள் கற்கச் செல்லும் பாடசாலைகள் குறித்தும் இன்பகரமான மனப்பதிவை அவர்களிடத்தில் ஏற்படுத்த முடியுமென நினைக்கின்றேன்.
அதுமாத்திரமின்றி, இப்பாடசாலைகளிலிருந்தே பிள்ளைகள் மத்தியில் ஆண்மீக அறிவு ஊட்டப்பட வேண்டும். இன்று நமது சூழல் குறிப்பாகக் குடும்பச் சூழல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் அதனோடு இணைந்த நவீன தொலைத்தொடர்பு சாதனப் பாவனைகளுக்கும் அடிப்மைப்பட்டதாக மாறிக்கொண்டு வருவதைக் காண முடிகிறது. இதனால் பல பிள்ளைகள் மத்தியில் நெறி தவறிய பழக்க வழக்கங்கள் வீட்டுச்சூழலில் உருவாக்கப்பட்டு அவை பாடசாலைகளிலும் அப்பிள்ளைகளினால் தொடரப்படுவதாக அறிய முடிகிறது என்றார்.
ஒழுக்க விழுமியமுள்ள எதிர்கால சமூகம் உருவாகுவதற்கு முன்பள்ளிகள் பெரும் பங்களிப்பு செய்ய வேண்டுமென நினைக்கின்றேன். மொழிகளுக்கும் கலைகளுக்கும் முன்பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற அளவுக்கு ஆண்மீகப் போதனைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவது முக்கியமெனக் கருதுவதுடன் தர நிர்ணையத்துடன் முன்பள்ளிகள் அமையப்பெறுவதும் அவசியமெனக் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் அல்பஹ்ரியா அதிபர் உட்பட பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டதுடன் முன்பள்ளிப் பாடசாலையின் ஆசிரியையுக்கும் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment