முஅத்தீன்மார்களுக்கான சமூக,உளவியல் கருத்தரங்கு
(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை செஸ்டோ சிறீலங்கா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செஸ்டோ சமய மற்றும் கலாசார பேரவையின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்மார்கள் மற்றும் பணியாளர்களுக்கான சமய,சமூக,உளவியல் கருத்தரங்கு அண்மையில் மருதமுனை மத்திய பள்ளிவாசலில் நடைபெற்றது.
செஸ்டோ சிறீலங்காவின் தலைவர் நாபி.எம்.முஸ்னி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி, அஷ்ஷெய்க் எம்.ஐ.ஹுசைனுதீன் றியாழி, அஷ்ஷெய்க் எம்.எம்.அஹமது அன்சார் மௌலானா, அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், அஷ்ஷெய்க் ஏ.ஆர்.பைஸால் கியாஸ், அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.பர்ஷான்,சமாதானக் கற்கைக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ், அஷ்ஷெய்க் யூ.எல்.எம்.சஜீத், அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.ஆபீத்,பொதுச் சுகாதார பரிசோதகர் பைசால் முஸ்தபா,முஸ்லிம் சமய கலாசார திணைக்கள வளவாளர் அஷ்ஷெய்க் ஏ.சுபைதீன் தப்லீஹி ஆகியோர் பல்வேறு விஷேட தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Post a Comment