Header Ads



'எனது தொலைபேசி உரையாடல்களை எவரோ செவிமடுக்கின்றனர்' - கோட்டா

தான் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தும் அனைத்து சந்தர்ப்பங்களிலும்,  அலைவரிசை மாத்திரமின்றி, அழைப்பின் நிலைமையும் குறைவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசி உரையாடல்களை செவிமடுக்கும் இயலுமை சில வெளிநாட்டு தூதரக அலுவலங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ள கோத்தபாய,  தனது தொலைபேசி உரையாடல்களை எவரே செவிமடுக்கின்றனர் என்ற கடும் சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் தனது கையடக்க தொலைபேசி இனந்தெரியாதவர்களினால் செவிமடுக்கப்படுவதாக ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார். அத்துடன் சில முக்கியஸ்தர்களின் தொலைபேசி உரையாடல்களும் செவிமடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதில் வெளிநாட்டு தூதரகமும், சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.