Header Ads



13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கம் உடனடியாக ஆட்சியை விட்டு வெளியேற நேரிடும்

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதுவே அரசாங்கத்தின் முடிவாக அமையும் என ஆளும் கட்சியின் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதில் பிரச்சினை கிடையாது எனவும், அவ்வாறு ரத்து செய்தால் அரசாங்கம் உடனடியாக ஆட்சியை விட்டு வெளியேற நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்களை தேசப்பற்றாளர்களாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களை இனவாதிகளாகவே அடையாளப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இன சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் புரிந்துணர்வின்மையை களைய வேண்டுமாயின் அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்வதே தற்போதைக்கு காணப்படும் மிகவும் சிறந்த தீர்வுத் திட்டமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் இந்தத் தீர்வுத் திட்டத்தை வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆளும் கூட்டணி கட்சிகளான ஜே.என்.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. gtn

No comments

Powered by Blogger.