முஸ்லிம்களுடனான உறவை சீர்குலைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அநியாயம் செய்யகூடாது'
(நஷ்ஹத் அனா)
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி விவசாயப் பகுதியில் இரு சிவில் சமுகத்திற்கிடையில் இடம்பெற்ற சண்டையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்ட்ம் செய்து அப்பிரச்சினையை பூதாகாரமாக மாற்ற முயற்சிப்பது இரு சமூக ஒற்றுமையை சீர் குழைக்கும் செயற்பாடாக அமையும் செயல் என்று கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் இரண்டாவது பரிசளிப்பு விழா நிகழ்வு வித்தியாலய அதிபர் எம்.ஏ.அஹமது ஸாபீர் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிவில் சமுகத்தைச் சேர்ந்த இரு குழுக்கள் சண்டையிட்டு சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையம் சென்ற போது அதன் தீர்வு கிடைக்கும் முன்பே தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்ற அந்த ஆக்ரோசமான செயற்பாட்டைப் பார்த்து மிகவும் கவலைப்பட்டேன்.
நான் தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், மாகாண சபை உறுப்பினர்களிடமும் வேண்டிக் கொள்வதெல்லாம் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குழைக்க இவ்வாறான அநியாயத்தைச் செய்ய வேண்டாம் நாங்கள் கடந்த காலங்களில் தமிழர்களும் முஸ்லீம்களும் பட்ட துயரங்களும் துன்பங்களும் உங்களுக்குத் தெரியாதது இல்லை எனவே இரு சிவில் சமுகத்திற்கிடையில் இடம் பெறும் பிரச்சினைகளை பூதாகாரமாக முயற்சிக்க வேண்டாம் இது இரு சமுகத்தின் உறவுக்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தாது.
கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அவர்களின் கொள்கையாக எதை செய்தார்களோ அதையே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகம் என்னிடம் இருக்கின்றது.
விவசாயிகளிடத்தில் பிரச்சினை ஏற்படுகின்ற போது இரு சமுகத்தில் உள்ளவர்களையும் கூப்பிட்டு இரு சமுகத்திற்கிடையில் உள்ள பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துங்கள் அவ்வாறு இல்லாமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கின்றபோது அது இன உறவுக்கு நல்லதாக அமையாது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உறுகாமம் என்ற முஸ்லீம் பிரதேசத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு இந்திய நாட்டின் உதவியுடன் வீட்டுத் திட்டம் வந்த போது முஸ்லீம்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படக் கூடாது என்று போஸ்டர்கள் அடித்தபோதும் அப் பிரதேச மக்களின் வீடுகள்,கடைகள்,வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட போதெல்லாம் நாங்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதற்காக ஒட்டு மொத்த தமிழ் சமுகம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற விடயத்தில் மிகவும் நிதானமாக நடந்து கொண்டோம்.
பிரச்சினை ஒன்று நடக்கும் போது அதைப் பூதாகாரமாக மாற்றி அரசியல் செய்வதை நிறுத்தி இரு சிவில் சமுகத்தினரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதன் மூலமே இன ஒற்றுமையை வளர்க்க முடியும் என்றும் கூறினார்.
.jpg)
Post a Comment