Header Ads



யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க. பட்டியலில் டாக்டர் இல்யாஸ்..?

ஆஸாத் சாலியின் நுஆ கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல்யாஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆஸாத் சாலிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் ஐக்கிய தேசியக்க கட்சி சார்பில் முஸ்லிம்க்ள அதிகமாக வாழும் ஏனைய பிரதேசங்களிலும் ஆஸாத் சாலியின் நுஆ சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாக அறியவருகிறது.

புத்தளம் மாவட்டம் தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படாத நிலையில் அதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

4 comments:

  1. தங்கள் வரவு நல்வரவாகுக!

    வடபுல முஸ்லிம்களின் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் குப்பைக் கூடைக்குள் போனாலும் திருப்தியே என எதிர்பார்க்கும் பல முஸ்லிம் அரசியல் தலைவர்களும், அவர்களின் பிரச்சார ஏஜென்டுகளும் இருக்கும் நிலையில் தங்களின் ஐ.தே.கட்சியினூடான வருகையையும் அவர்கள் வரவேற்கவே செய்வார்கள்.

    வாழ்த்துக்கள். இது ஜனநாயக நாடு! உங்களுக்கும் மக்கள் ஆதரவு இருக்கும். அது வாக்கெண்ணி முடிந்ததும் தெரிந்து விடும்!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. good choice..! wish you all the best sir.

    ReplyDelete
  3. புவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களே,

    உங்களுடைய அதிகமான கருத்துக்கள் நல்லவையாக இருப்பது வழமை.

    ஆனால், இந்த விடயத்தில் எதுவும் தெரியாமல், எதோ கருத்து சொல்லித்தான் ஆக வேண்டும் என்பது போன்று கருத்து பதிந்துள்ளதாகவே தோன்றுகின்றது.


    டாக்டர் இலியாஸ் அவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பெயரில் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றம் சென்று 5 வருடங்களாக என்ன செய்தார் என்பது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மறக்கவில்லை.

    இவருக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் எவ்வித வாக்குகளுமே கிடையாது என்பதனை யாழ்ப்பாண முஸ்லிம் என்ற வகையில் கூறிக் கொள்கின்றேன். ( பழைய ரணங்களைக் கிளறி இவரை விமர்சிக்க விரும்பவில்லை, விட்டு விடுகின்றேன். )

    நன்றி.

    ReplyDelete
  4. SIR UNKALUKKU VETRI ....N...

    ReplyDelete

Powered by Blogger.