Header Ads



முஸ்லிம்களின் உரிமைகளில் இடைஞ்சல் செய்ய எவருக்கும் உரிமை கிடையாது - அமைச்சர் அதாவுட


(எம்.எம்.எம். ரம்ஸீன்) 

முஸ்லிம்களின் உரிமைகளிலும். சமய கடமைகளிலும் இடைஞ்சல் செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரட்ன குறிப்பிட்டார். 

ஹெம்மாதகமை தும்புளுவாவை வை.எம்.எம்.ஏ யின் ஏற்பாட்டில்ஹெம்மாதகமை ரியோ வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட சிரேஸ்ட அமைச்சர் அதாவுத செனவிரட்ன தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

முஸ்லிம்கள் தனித்துவமான வாழ்வொழுங்கைக் கொண்டவர்கள். அவர்களின் சமய கடமைகளில் யாரும் தலையிட முடியாது. அத்துடன் அவர்களின் உரிமைகளில் கைவைக்கக்கூடாது. முஸ்லிம்கள் புனித ரமளானில் இப்தார் நிகழ்வுக்காக இங்கு பெருந்தொகையான பௌத்த சகோதரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது இன நல்லிணக்கத்திற்கு பெரும் பங்களிப்பு செய்யும். இதனைப் பாராட்ட வேண்டும் என்றார்.   

இதில் பௌத்த மதகுருமார் உட்பட பெருந்தொகையான ஹெம்மாதகமை பகுதி பௌத்தர்களும் கலந்து கொண்டனர். 

இதில் செனவிரட்னவின் அறுபது வருட அரசியல் சேவையை கௌரவித்து தும்புளுவாவை வை.எம்.எம்.ஏ யின் தலைவர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் (கபூரி) மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஜே.எம். றியாஸ் ஆகியோர் அமைச்சருக்கு நினைவுப்பேழை வழங்கினர். 


1 comment:

  1. amatchar avarhalea waarungal waludan purappaduwoam.

    ReplyDelete

Powered by Blogger.