கூறை மீது ஏறிய ஆசிரியை தனது போராட்டத்தை கைவிட்டார்
(எம்.எம்.ஏ.ஸமட்)
கொழும்பு றோயல் கல்லூரின் மொட்டை மாடியின் மேல் அமர்ந்து தனது இடமாற்த்துக்கு நியாயம் வேண்டி இன்று (30) போரட்டம் நடத்திய பெரும்பான்மையினத்தைச் சார்ந்த ஆசிரியை கல்வி அமைச்சின் தலையீட்டை அடுத்து தனது போரட்டைக் கைவிட்டுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
தேசிய பாடசாலைகளில் ஒரே பாடசாலையில் 15 தொடக்கம் 20 வருடங்களாக ஆசிரியர் பணி புரிந்து வந்தோர் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும குறித்த ஆசிரியை அவ்விடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாது தொடர்ந்து அக்கல்லுரியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
எனெனினும், அவர் தொடாந்து அக்கல்லூரியில் பணி புரிய முடியாது என்ற அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில இன்று காலை கல்லூரியின் மொட்டை மாடியில் எறி அமர்ந்து கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கல்லூரியின் நிர்வாகம் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகள் பிரிவின் கல்விப் பணிப்பாளர் குறித்த கல்லூரிக்கு விரைந்து குறித்த ஆசிரியையிடம் அவரது கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்தையடுத்து போரட்டத்தை அவ்வாசிரியை கைவிட்டுள்ளார்.

It's shows that we have no strong and stable administrative structures because of Political infuluences in all matters.Therefore non-politician supporters do such challenges for immediate transfer or etc...
ReplyDelete