Header Ads



மூடப்பட்ட கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பில் இன்று முக்கிய கூட்டம்

கொழும்பு - கிரண்பாட்சில் நேற்று வியாழக்கிழமை அஸர் தொழுகையுடன் திறக்கப்பட்டு, பின்னர் பௌத்த பேரினவாதிகளின் எதிர்ப்பினால் மூடப்பட்ட பள்ளிவாசல் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை, 5 ஆம் திகதி முக்கிய கூட்டமொன்று பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் குறித்த பள்ளிவாசல் தொடர்பில் முக்கிய திர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதில் முஸ்லிம் பிரதிநிதிகள், பௌத்த குருமார், பிரதேச முக்கியஸ்தர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_3601.html

No comments

Powered by Blogger.