Header Ads



கம்பளையில் முச்சக்கர வண்டியில் ஆடுகளை ஏற்றி வந்தவர்கள் கைது

(எம்.எம்.எம். ரம்ஸீன்)  

ஹெம்மாதகமையில் இருந்து கம்பளைக்கு முச்சக்கரவண்டியில் மூன்று ஆடுகளை ஏற்றி வந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவரை ஹெம்மாதகமை பொலிசார் 03.07.2013 கைது செய்துள்ளனர். 

ஹெம்மாதகமை – கம்பளை பிரதான வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் முச்சக்கரவண்டியை பொலிசார் மறித்து சோதனைக்குட்படுத்திய போது மூன்று ஆடுகளை ஏற்றி வந்த முச்சக்கரவண்டிச் சாரதி உட்பட சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரனைகள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

1 comment:

  1. விமானத்துக்குள்ள குடித்துவிட்டு கூத்துப் போட்டால் குத்தமில்லை. முச்சக்கர வண்டியில் ஆடுகளை ஏற்றிவந்தால்தான் குற்றம்.

    ReplyDelete

Powered by Blogger.