டெங்கு நுளம்பு ஒழிப்புக்காக வீதிக்கு வந்த சாய்ந்தமருது அல்- ஜலால் மாணவர்கள்
(எஸ்.அஷ்ரப்கான்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை அதிபர் எம்.எஸ் நபார் தலைமையில் இன்று (04) வியாழக்கிழமை வித்தியாலய முன்றலில் ஆரம்பித்து வீதிவழியாக சென்றது. இந்த ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள்இ ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் ரீ.கே.எம். சிறாஜ், முஹம்மட் அக்மல், எம்.எஸ். இப்திகார் ஆகியோரின் வழிநடாத்தலில் இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ஏந்தியிருந்த சுலோகங்களில் வீட்டின் சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைப்போம், சுத்தம் ஈமானில் பாதி, உயிர் கொல்லி டெங்கை ஒழிப்போம், டெங்கு நுளம்பை ஒழிக்க நாம் எல்லோரும் கைகோர்ப்போம்இ கொடிய டெங்கு வராது தடுக்கும் முறைகள் அடங்கிய படங்களுடன் பதாகைகளையும் கொண்டு சென்றனர்.


Post a Comment