Header Ads



கண்டி ஜனாதிபதி மாளிகையில் அதான் சொல்லப்பட்டு, தொழுகையும் நடாத்தப்பட்டது

கிழக்கு மாகாண சபை நெருக்கடி தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று சனிக்கிழமை,13 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கண்டி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அங்கு இப்தார் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளன. நோன்பு திறப்பதற்கான அதான் (பாங்கு) சொல்லப்பட்டவுடன் முஸ்லிம் அமைச்சர்கள் நோன்பு திறந்துள்ளனர். அவர்களுடன் சில நிமிடங்கள் இருந்துள்ள ஜனாதிபதி, பின்எழுந்து சென்றுள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் மஹ்ரிப், இஷா தொழுகைகளை இணைத்து இமாம் நடாத்தியுள்ளார்.

பின்னர் இரவு நேர விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதியும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.


4 comments:

  1. சும்மா இஸ்லாத்தை விற்று வயிறு நிரப்பியதுதன் மிச்சம். எந்த பலனும் இல்லை

    ReplyDelete
  2. ஆ அப்படியா , 13 திருத்தத்திட்கு ஆதரவுதானே

    ReplyDelete
  3. ella pirachinikkum karanam intha amichaargalthan kaddi kudutthu kuddi kudukkum kooddam

    ReplyDelete
  4. this is the unnecessary action such thing which happened in the past even in the Buddhist temple and the president's palace caused some concern in the mind of Buddhist monk also one reason of the present situation.

    ReplyDelete

Powered by Blogger.