Header Ads



பொதுபல சேனாவையும், ஜம்மியத்துல் உலமாவையும் பேச வைத்தேன் - கோட்டா

பொதுபல சேனாவை ஜம்மியத்துல் உலமாவுடன் பேச வைத்தேன். அதனால் நிறைய விடயங்கள் பேசி தீர்த்துக்கொள்ளப்பட்டன. மோதலும் தவிர்க்கப்பட்டது. இல்லாவிடில் பெரிய குழப்பங்களுக்கு இது வழிவகுத்திருக்கும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டினுடைய பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. அதனால் எந்த குழுக்களை வேண்டுமானாலும் அழைத்து பேச முடியும். பல புத்த பிக்குமார்களை நான் நன்கு அறிவேன். ஆனால் அரசியல்வாதிகள் இதனாலேயே நான் இந்த முறுகல் நிலைக்கு காரணம் என்று பொய்யான பிரசாரம் செய்கிறார்கள்.

பொதுபல சேனாவின் மத குருமார்களை எனக்கு மட்டுமல்ல ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும். குழுக்களோடு சம்பந்தப்பட்டவர்களை தெரிந்து வைத்திருப்பதால் அவர்களை நாங்கள்தான் இயக்குகிறோம் என்று அர்த்தப்படுத்த முடியாது. பிரச்சினை என்று வந்தால் அது எந்த அமைப்பானாலும் அழைத்து பேசி தீர்க்க முயற்சிப்பேன். இவர்கள் தீவிரவாத அமைப்புக்களல்ல. ஆகையினால் அவர்களுக்குள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்க முயற்சிப்பது எனது கடமை.

இதனை அரசியல் லாபத்திற்காக பார்க்காமல் யதார்த்த ரீதியில் பார்க்க வேண்டும். நான் ஒரு சிங்கள பௌத்தன். எனக்கு எந்த விகாரைக்கும் செல்ல முடியும், எந்த பௌத்த மத குருவினையும் சந்திக்க முடியும். இதனை அரசியலாக்க வேண்டாம்.

தமிழர்களுக்கு என்று ஒரு பகுதியும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பகுதியும் சில அதிகாரகங்களுடன் தருவது என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல. வடக்கில் தமிழர்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும் என்று சொல்வது தவறு. இன்று கொழும்பில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுக்கு வடக்கில் நிலம் வாங்க முடியாது. ஆனால் தமிழர்களுக்கு இங்கு நிலம் வாங்கலாம். எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்ற நிலை உள்ளது.

இலங்கையர்கள் அனைவரும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வாழும் உரிமை இருக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதை செய்வதற்கு நல்ல சூழ்நிலை இப்போது உள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த வாய்ப்புக்களை நாம் தவறவிட்டு விட்டோம். மற்ற நாடுகள் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கும்போது யுத்தம் செய்து கொண்டிருந்ததால் நமது முன்னேற்றம் மோசமான முறையில் பாழடைந்தது. ஒருநாளில் 22 விமானங்களை இழப்பதென்றால் எப்படிப்பட்ட நஷ்டம்?  வெளிநாட்டு பயணிகள் வருகை, மீன்பிடிதொழில் என்று அனைத்திலும் நாம் நஷ்டமடைந்தோம். முதலீட்டாளர்கள் இங்கு வரவே அஞ்சினார்கள்.

இப்போது நாட்டில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவுகின்றது. இழந்தவற்றை கட்டியெழுப்ப நல்ல தருணம். தமிழர்களையோ முஸ்லிம்களையோ நாம் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கவில்லை. இப்போது யார் கொழும்பில் பெரிய வர்த்தகர்களாக இருக்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும்தான் மற்றவர்களுடன் சேர்ந்து முன்னிலையில் இருக்கின்றார்கள்.

ஒரு முஸ்லிமையோ, தமிழரையோ பல்கலைக்கழகம் செல்லாமல் தடுத்திருக்கிறோமா? வைத்தியத்துறையிலோ நீதித்துறையிலோ பொறியியல் கல்வித்துறைகளிலோ எவ்வளவு சிறுபான்மை சமூகத்தினர் முன்னிலை வகிக்கின்றார்கள். திறமை விருப்பம் இருந்தால் எவருக்கும் முன்னேற வாய்ப்பு உண்டு.

சிறுபான்மையினர் எல்லா இடங்களிலும் தடையின்றி பரந்து வாழக்கின்றனர். அப்படியிருக்கும்போது, தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு என்று தனித்தனி பகுதிகள் கேட்பது எந்த வகையில் நியாயம்?

4 comments:

  1. பிள்ளையையும் கில்லுங்க தொட்டிலையும் ஆட்டுங்க.

    ReplyDelete
  2. என்ன திடீரென ஐயா இங்கால பக்கம்.... சகோதரர் திட்டினாராக்கும் ஒன்னால இப்ப கொஞ்சம் நாறிக்கிட்டிருக்கு என்று.

    இப்ப நாட்டில் அமைதியும் இஸ்திரத்தன்மையும் எங்கு நிலவுகின்றது உங்களைப்போல நாசகார சக்திகள் அரசியலில் இருக்கும்போது எப்படி அது நடக்கும்.

    செய்யிற ஊத்த வேலைகளையெல்லாம் செய்துவிட்டு மக்களும் வெளினாடும் கொஞ்சம் கூடுதலாக கேள்வி கேட்டால் இதுபோல ஒரு நல்ல பிள்ளையாட்டம் ஒரு செய்தியை வெளியிடுவதால் ஒருபோதும் உங்களைப்போன்ற தீவிரவாதிகள் ஒருபோதும் நல்லவர்களாக முடியாது.

    அழகாக விழங்கக்கூடியதாகவுள்ளது மேலுள்ள செய்தியில் கோத்தாவின் மனதில் என்ன உள்ளதோ அதை இல்லையென்று சொல்ல முயற்சித்திருக்கின்றார். ஆனால் அப்பட்டமான பொய்யென்பது வெளிப்படையாகவே புரிகின்றது....

    ReplyDelete
  3. கடைசி வசனங்களை “மோத வைத்தேன்” என்று நீங்க சொன்னால் மட்டும்தான் நாங்க நம்புவோம்.

    ReplyDelete
  4. openning ellam nalla thaan iriku, aana finishing sariyilleye?
    kekuravan kenayanaa irundha eli helicopter otticcinu solluvingale...

    ReplyDelete

Powered by Blogger.