Header Ads



பல்கலைகழகங்களில் சரிவர சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால்..!

(யு.எம்.இஸ்ஹாக்)

பல்கலை கழகங்களில் சரிவர  சட்டங்கள் நிறை வேற்றப்படுமானால் சில வேளைகளில் மாணவர்கள்  உரிமையை கூட இழக்க நேரிடும். அல்லது பல்கலைகழகத்தில்  படிக்க  முடியாத நிலை ஏற்படும்  என தென் கிழக்கு பல்கலைகழக  உப வேந்தர்  கலாநிதி  எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  தெரிவித்தார் 

கல்முனை தமிழ் சங்கமும்  மாணவர் மீட்பு பேரவையும்  இணைந்து கல்முனை கல்வி வலயத்தில்  2012ஆம்  ஆண்டு கல்வி பொது தராதர பரீட்ச்சையில்  03ஏ   சித்தி பெற்ற  25 தமிழ் ,முஸ்லிம் மாணவர்களை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  சனிக்கிழமை (20) கல்முனை நால்வர்  கோட்டம் தாமரை மண்டபத்தில்  தமிழ் சங்க தலைவர்  கலாநிதி பரதன் கந்தசாமி  தலைமையில் நடை பெற்றது.

பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே தென் கிழக்கு பல்கலை கழக உபவேந்தர்  எஸ்.எம்.எம். இஸ்மாயில்  மேற்கண்டவாறு பேசினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 

உலகத்தில்  சமாதானத்தை ஏற்படுத்த கூடிய நற் பிரஜைகளை உருவாக்கும் இக்கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். சமுகத்தின் சொத்துக்களாக  மாணவர்கள் இருக்கின்றீர்கள்  உங்களால் இந்த சமூகத்தில் பல் வேறுபட்ட மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மாணவர்களாகிய நீங்கள்  வீதிக்கு சென்று போராட்டம் நடத்துகின்றீர்கள்,பல்கலைக்  கழகத்துக்கு எதிராக  பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர், தேவையற்ற குழப்பங்களை பல்கலைகழகத்தில் உருவாக்கின்றனர். இவற்றையெல்லாம் பெற்றோர்கள் உன்னிப்பாக அவதானிக்க  வேண்டும்.

ஏனெனில்  தற்போது நாட்டில் பல்வேறுபட்ட சட்டங்கள்  அமுல்படுத்தப் படுகின்றன. மாணவர்களை  சிறந்த வழியில் நடத்துவதற்கும்  பல்கலை களகங்களை  இலகுவாக நடாத்துவதற்கும்  திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன . அந்த சட்டங்களை பல்கலைகழகங்களில் நாங்கள் சரிவர் நிறைவேற்றுவோமானால்  மாணவர்களின் உரிமையை கூட இழக்க நேரிடும் என உபவேந்தர்  கலாநிதி இஸ்மாயில் தெரிவித்தார் .

No comments

Powered by Blogger.