இலங்கையில் வருடாந்தம் 1100 சிறுவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டவர்களினால் தத்தெடுப்பு
வருடந்தோரும் 1100 சிறுவர்கள் உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களினால் தத்தெடுக்கப்படுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரச சபை குறிப்பிடுகிறது. இலங்கைச் சிறுவர்கள் தத்தெடுக்கப்படுவது தொடர்பில் அதிகாரசபை மேலும் குறிப்பிடுவதாவது,
வருடந்தோரும் 1100 சிறுவர்கள் உள்நாட்டவர்களினாலும் வெளிநாட்டவர்களினாலும் தத்தெடுக்கப்படுகின்றபோதிலும் அவர்கள் தத்தெடுக்கப்படும் பொறிமுறையானது ஒழுங்கானதொரு பொறிமுறையின் கீழ் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகிறது. இதனால, இச்சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையை அவதானிக்க முடிகிறது.
சிறுவர்கள் தொடர்பாகவும் தத்தெடுத்த பெற்றோர்கள் தொடர்பாகவும் பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இலங்கைச் சிறுவர்களைத் தத்தெடுப்பதற்காக உள்நாட்டவர்களிடமிருந்து 5000 விண்ணப்பங்களும் வெளிநாட்டவர்களிடமிருந்து 650 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டுகிறது.
இவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கைச் சிறுவர்களை உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தத்தெடுப்பதற்கான புதிய கொள்கையொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டு வருவதாக அதிகாரசபை குறிப்பிட்டுகிறது.
இதற்காக புதிய குழுயொன்று நிமிக்கப்பட்டு உள்ளநாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் சிறுவர்களைத் தத்தெடுப்பதற்கான உறுதியான பொறிமுறை உருவாக்கப்படவுள்ளது. இதன்மூலம் தத்தெடுக்கப்படும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் உறுதி செய்யப்படுமெனவும் கொள்கை வகுக்கும் குழுவில் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் வைத்திய நிபுணர்களும் பங்குகொள்வர் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment