முஸ்லிம்களிடமிருந்து சூறையாடிய காணிகளில் பௌத்த விகாரைகள் (படங்கள்)
(புல்மோட்டையிலிருந்து முஹம்மது றினாஸ்)
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடக்கப்பட்ட புல்மோட்டை முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி www.jaffnamuslimcom பல தடவை சுட்டிக்காட்டியிருந்தது.
பேரின சக்திகளின் அத்துமீறிய நடவடிக்கை மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் புல்மோட்டையில் கடந்த சில தினங்களாக புனித வலயம் என்னும் பேரில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக அரச நில அளவை அதிகாரிகளினால் பிரிக்கப்பட்டு எல்லைக்கற்கல் இடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குச்சவெளி பிரதேச செயலாளரின் நேரடி கவனத்தின் கீழ் சுமார் 300 ஏக்கர் காணிகள் அபகரிக்கும் பணி அரங்கேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரிசிமலை, கண்நீராவி, ஆண்டான்குளம், வளத்தாமலை, மண்கிண்டிமலை போன்ற இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் மிகவும் கவலையோடு காணப்படுவதோடு பிரதேச அரசியல் பிரமுகர்களிடமும் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்பிரதேசங்களில் விவசாய செய்கைகள் கடந்த இருபது வருடங்களுக்குமேல் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குடியிருப்பு தளங்களையும் அமைத்துள்ளனர்.இங்கு செழிப்புடன் காட்சி தரும் தென்னை,மா,முந்திரிகை போன்ற நீண்ட கால தாவரங்கள் மக்கள் இங்கு வாழ்ந்ததற்கு தகுந்த சான்றாக அமைகின்றன. அத்தோடு அவ்வப்போது சிறுபோக பெரும்போக விவசாய பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட சுவடுகளும் காணப்படுகின்றன.
காணிகளுக்கான அனுமதி பாத்திரங்களுக்காக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பித்திருந்தும் இன்று தருவோம் நாளை தருவோம் என மக்கள் ஏமாற்றப்பட்ட வண்ணமே உள்ளனர். ஆனால் தமிழ் சிங்கள மக்களால் விண்ணப்பம் கோரப்பட்ட காணிகளுக்கான அனுமதி படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன.அண்மையில் தென்ன மரவாடி, திரியாய், மருதங்குடா பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட காணி அனுமதியை இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.
இன்னும், இப்பிரதேசங்களில் ஆங்காங்கே அரச காணிகள் பரந்து காணப்படுகின்ற போதும் ஏன் அப்பாவி மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு குச்சவெளி பிரதேச செயலகம் அனுமதியளித்துள்ளது என மக்கள் கேள்வி எழுப்புவதோடு கவலையும் வெளிப்படுத்தி தீர்வுக்காக காத்துநிற்கின்றனர்.
புனிதவலயம் புதிய பாதுகாப்பு படை முகாம்கள் அமைப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கி பொதுமக்களின், குடியிருப்பு விவசாய காணிகளுக்கான அனுமதியினை இழுத்தடிக்கும் பிரதேச செயலாளரின் செயற்பாட்டினை கவணத்தில் கொண்டு அரசியல் வாதிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பறிபோய்க்கொண்டிருக்கும் எமது பூர்வீக மண்ணைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Yes, please inform all about this if it is true make more pictures and fight with proofs!!!!
ReplyDeleteReally this injustice why cant speak in parliament the Muslims M P and the chief minister what his doing the same thing if Muslims done what will happen day by day government and (BBS hidden leader) kothbaya doing this kind of nonsense Marhoom asraf sir alive he will not let any single incident for Muslims our current politicians boneless people we are worsting our votes.
ReplyDeleteஇப்போதும் கூட முஸ்லிம்கலிள் ஒற்றுமை என்ற சொல்லுக்கே இடம் கிடையாது.காணிச் சண்டை, வேளிச் சண்டை, நேர்மையற்ற வியாபாரம், வாக்கு மீரல், போட்டி, பொறாமை,சீதனம், வட்டி, சுய நலம்... இதனால் தான் அல்லாஹ் இந்த காபீர்கலைக் கொண்டு எம்மை சோதிக்கிரான்.
ReplyDeleteயா அல்லாஹ் எம் முஸ்லீம்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவாயாக..!...!
Every noor and corner of Sri Lanka will be captured and handed by Buddhists under the name of Holy Land and Government property.
ReplyDelete