தம்புள்ள பள்ளிவாசல் என்ற ஒன்று உள்ளதா..?
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தம்புள்ள பள்ளிவாசலை சுற்றயுள்ள கடைகளை அப்புறப்படுத்த விதிக்கப்பட்ட காலக்கெடு வெள்ளிக்கிழமை, 26 ஆம் திகதி முடிவடைகிறது. இந்நிலையில் தமது கடைகளை பலாத்காரமாக அகற்றினால் தம்புள்ள பள்ளிவாசலிலேயே தஞ்சமடைய வேண்டுமென அங்கு வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளதாக தம்புள்ள பள்ளிவாசலின் உதவிச் செயலாளர் ரவூப் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
அத்துடன் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மற்றும் வக்பு சபை என்பன தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் பாதுகாப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
இதேநேரம் ஊரிலுள்ள சிலர் தம்புள்ள பள்ளிவாசலை சுற்றியுள்ள கடைகள் அகற்றப்பட காலக்கெடு விதித்து கடிதங்களை அனுப்பியுள்ளீர்களே. அதுபோன்று தம்புள்ள பள்ளிவாசலுக்கு எந்தக் கடிதமும் வரவில்லையே என நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேச செயலக ஊழியர்களிடம் கேள்வியெழுப்பிய போது, தம்புள்ள பள்ளிவாசல் என்ற ஒன்று உள்ளதா? அது எங்குள்ளது? அதற்கான பதிவுகள் எதுவும் இருந்தால்தானே என சிங்கள் அதிகாரிகள் பதில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாக சபையின் உதவிச் செயலாளர் ரவூப் மேலும் தெரிவித்தார்.

Post a Comment