Header Ads



நெருக்கடியான சூழலில் எமது கைகள் இறைவனிடம் பிரார்த்தணைக்காக உயருமா..?

(எம். உவைஸுல் கர்னி)

எம்மை வேகமாக வந்தடைந்த ரமலானின் இருபத்தியொரு நாட்கள் வேகமாக எம்மை விட்டு ஓடிவிட்டது. ரமலான் காலத்திலும் ஈராக், ஆப்ஹானிஸ்தான், சிரியா, எகிப்து, மியன்மார் போன்ற நாடுகளில் மட்டுமன்றி எம்மையும் சோதனைகள் பல்வேறு வழிகளில் துறத்திக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே சில இடங்களிலும் அல்லாஹ்வின் மாளிகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத சில நிகழ்வுகள் நடந்துள்ளது. முஸ்லிம்களாகிய நாம் மௌனித்து  கோழைகளாகி விட்டுள்ளோம். எந்தளவுக்கென்றால் நம்மில் பலர் இந்த பிரச்சினைகளை இலகுவாக்கி ஒற்றமையான மக்கள் கூட்டத்தைக் கூட இறைவனிடம் கேட்க தயாரில்லாமல் உள்ளனர். ரமலானில் நோன்பு திறக்கும் இப்தாருடைய நேரத்தில் இறைவன் அடிவானத்துக்கு இறங்கி அடியார்களின் பிரார்த்தணைகளை செவிமடுத்து அங்கீகரிக்கின்றான். இந்த சந்தர்ப்பத்தை நாம் எமது பாதுகாப்புக்கான துஆக்களை கேட்பதற்கு பயன்படுத்துகின்றோமா? ரமலானுடைய வித்று தொழுகையில் ஓதப்படும் துஆக்களிலாவது இஸ்லாத்தை பாதுகாக்குமாறும்  எம்மீது கெட்ட மக்களை சாட்டாதிருப்பதற்காகவும் துஆக்கள் செய்யப்படுகின்றதா? 

இஸ்லாம் அந்நியோன்யமாக சமாதானமாக வாழ்வதை வழியுறுத்தும் அதேவேளை சோதனைகள் ஏற்படும் போது இறைவனின் பக்கம் கையேந்துமாறும் சொல்லித்துருகின்றது. ரமலானின் இறுதி நாட்களில் தொழுகைகளின் போதும் துஆ கேட்பதும், இப்தாருடைய வேளையில் துஆ செய்வதும் பிறகு தராவீஹிலும் தஹஜ்ஜத்திலும் துஆ செய்வதும் முஸ்லிம்கள் எல்லோர் மீதிலும் கடமையாக உள்ளது. இந்த நாட்களை எந்த முஸ்லிமும் தவற விடக்கூடாது. எல்லோரும் வியாபாரத்திலும் பெருநாள் உடுப்புகள் எடுப்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் மறுபுறம் முஸ்லிம்களின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. இந்த ரமலானில் நோன்பு நோற்கும் பதினைந்து இலட்சம் பருவமடைந்த மக்களும் இறைவனிடம் இஸ்லாத்தை பாதுகாக்குமாறும் தம்மை பாதுகாக்குமாறும் வேண்டிக் கொள்ள வேண்டும். அதிலும் இப்தார் நோன்பு திறப்பதற்கு முன்புள்ள இருபது நிமிடங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மிக் முக்கியமான நேரமாகும். எனவே பள்ளிவாசல் நிர்வாகிகள் பள்ளிவாசல்களில் கூட்டு துஆக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வீடுகளிலுள்ளோர் குடும்பம் சகிதமாக இந்த துஆக்களைச் செய்ய வேண்டும். 

திருக் குர்ஆனில் அல்லாஹ்தஆலா நமக்கு சில துஆக்களை கற்றுத் தந்துள்ளான். அதே போன்று நபி (ஸல்) அவர்களும் பல துஆக்களை நமக்கு கூறியுள்ளார்கள். அவை பின்வருமாறு:  

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)இ நூலகள்்: திர்மிதிஇ நஸயீஇ இப்னுமாஜாஇ அஹமத்

மேலும் அல்குர்ஆனில் அல்லாஹ்தஆலாவே நமக்கு பல துஆக்களை கேட்குமாறு கூறி அந்த துஆக்களையும் கூறிக்காட்டுகின்றான். இன்றைய காலத்தின் தேவையாக அவை உள்ளன. அல்லாஹ்தஆலாவும் முஸ்லிம்களாகிய நாம் மிக நெருக்கமாக இருப்பதும் அவனுடைய ரஹ்மத்தைச் சுமந்தவர்களாக இருப்பதும் இக்காலத்தில் தான். நமக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான இச்சூழ்நிலையில் இந்த துஆக்களையும் இது போன்ற துஆக்களையும் அதிகமாக ஓதி எமது எதிரிகளிடமிருந்து எம்மையும் எமது பள்ளவாசல்களையும் மற்றும் எமது தாய், மனைவி, சகோதரிகள் பெண் மக்கள் , ஆண் மக்கள் போன்ற எல்லோரையும் பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவனிடம் கையேந்தி துஆ செய்ய வேண்டும். 
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
'எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்'. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும்இ அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.' 2:127-128

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக'. 3:147

اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
'அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.' 3:26

 رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
'எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!'. 2:250

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
'எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால்இ நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'. 7:23

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
'நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!' 10:85
 وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
'(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!' 10:86

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ  رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
'எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும்இ உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது'. 'எங்கள் இறைவா! காஃபிர்களுக்குஇ எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்'. 60:4-5

இந்த ரமலானின் எஞ்சியுள்ள நாட்களை தவற விடாது அனைவரும் இந்த துஆக்களை கேட்டு இறைவனிடம் அபயம் பெற்றவர்கள் ஆகி சகல ஆபத்துக்களிலிருந்தும் எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

1 comment:

  1. ACJU Ethai Kattal Mahitha Raja viedam Anumathi Kakkach Solluma
    Appa Kuduth Annachchi Mahitha Raja Anumathi Tharaviellai....?
    ==========Kalmunai Mohamed Fowse++++++++++++++

    ReplyDelete

Powered by Blogger.