'வேண்டாத பொண்டாட்டியை கைவிடலாம்' ரவூப் ஹக்கீம்
(JM.Hafeez)
பேரினவாத செயற்பாடுகள் எதுவும் தற்செயல் நிகழ்வல்ல. அவை அனைத்தும் திட்டமிட்ட செயற்பாடாகும் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் (5.7.2013) தெரிவித்தார். மடவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
பேரினவாத செயற்பாடுகள் எதுவும் தற்செயல் நிகழ்வல்ல. அவை அனைத்தும் திட்டமிட்ட செயற்பாடாகும் என்று நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் (5.7.2013) தெரிவித்தார். மடவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
எனக்கு அரசியல் ரீதியான தொடர்பு மட்டுமே மடவளையுடன் உண்டு. இருப்பினும் எனது ஊர் மடவளை என்று வெளியாட்கள் கருதும் அளவிற்கு எனக்கும் மடவளைக்கும் தொடர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு எனது அரசியல் பயணத்திற்கு மடவளை மக்கள் வழங்கிய 10 உயிர் தியாகம் என்னை அந்தளவு பிணைத்து விட்டது. இது எந்தப் பகுதி மக்களும் செலுத்தாத விலையாகும்.
அரசுடன் இணைந்து அரசியல் செய்வது எதிர்கட்சியில் இணைந்து அரசியல் செய்வதைவிடவும் சிரமமான காரியமாகும். அரசுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறவு ஒட்டியும் ஒட்டாததுமான ஒரு உறவாகும். ஏனெனில் நான் அமைச்சரவையில் அல்லது ஜனாதிபதியுடன் பேச வேண்டிய இடத்தில் பேசியுள்ளேன். ஆனால் கூட்டுப் பொறுப்பை நான் மீற முடியாது.
இன்று பேரினவாதிகள் சிலரால் முஸ்லிம்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனை தந்திரோபாயமாகத்தான் அணுக வேண்டியுள்ளது. இதற்காக நான் அரசை விட்டு வெளியே வரமுடியாது. அப்படி வெளியேறினால் அது பேரின வாதத்திற்கு உடந்தையாகி விடும். நான் தலைவன் என்ற வகையில் கட்சியைப் பாதுகாப்பதுடன் உணர்வு பூர்வமாக சமூகம் தொடர்பான பிரச்சினைகளை அணுக வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின் தமிழர் கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சு பதவியை பெற்றிருக்கமுடியும். ஆனால் நான் அப்படிச் செய்திருந்தால் அப்பதவியின் ஆயுள் மிகக் குறுகி இருக்கும். அத்துடன் கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லீம்களைப் பாதுகாப்பது பாரிய சவாலாக மாறி இருக்கும். பேரினவாத செயற்பாடுகள் எதுவும் தற்செயல் நிகழ்வல்ல. அவை அனைத்தும் திட்டமிட்ட செயற்பாடாகும்.
எனவே சமூகத்திற்காகத்தான் நான் அரசுடன் இணையவேண்டி வந்தது. அதே நேரம் கட்சியையும் பாதுகாக்கவேண்டி இருந்தது. வேண்டாத சம்சாரத்தை கை விடலாம். பின்னர் எந்தப் பிள்ளை எந்தப் பக்கம் தாவும் என்பது தெரியாது. பேரினவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை ஓரணியில் திரட்டும் இக்கால செயற்பாட்டின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து முற்றாக விலகி இருக்க முடியாது என்றார்.
மாகாண சபைகள் ஒழிக்கப்பட்டால் மத்திய மாகாணத்தை வைத்து இ.தொ.கா வும். கிழக்கு மாகாணத்தை வைத்து ஸ்ரீல.மு.கா. உம் பேரம் பேசும் சக்தியை இழந்து விடும் என்றார்.

தலைவரே உங்களிடம் எனக்கு பிடித்த விசயமே உங்கட தமிழும் அது உங்கட நாக்கில தவழும் அழகும் தான்....அது உங்களுக்கும் விளங்காது வேறு யாருக்கும் விளங்காது. அல்லாஹ் இற்கு மட்டுமே தெரியும் அவனே பதில் தர போதுமானவன்.
ReplyDeleteமாகாண சபைகள் ஒழிக்கப்பட்டால் பேரம் பேசும் சக்தி இழக்கப்படுமா ?
ReplyDeleteகிழக்கு மாகாண சபை அமைக்கப்படும் போது அவ்வாறு என்னதான் பேரம் பேசப்பட்டது ?
கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்தில் "பொம்மை ஆட்சியுடைய மாகாண சபையை ஒழிப்போம்" எனக்கூறியவர்கள் மாகாண சபையின் அதிகாரம் குறைக்கப்படுகின்ற "திவினெகும" சட்டத்திற்கு எந்தவித (மக்கள் சார்ந்த) நிபந்தனைகளுமின்றி ஆதரவு கொடுத்தார்கள்.
உன்மை என்னவென்றால் ?
மாகாண சபைகள் ஒழிக்கப்பட்டால் கிழக்கு மாகாண சபைக்காக போட்டியிடும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் எல்லோருமே நேரடியாக பாராளுமன்ற தேர்தலில் குதிக்க நேரிடிம். இதனால் இப்போதுள்ள சில அமைச்சர்களுக்கு அது பெரும் தலையிடியாக அமையும். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக அமையும் என்ற பயமும் இதில் உள்ளது.
தற்போது 13ம் திருத்தத்தில் கொண்டுவரவுள்ள விடயங்களை உற்றுநோக்கின் அதில் வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் இணைவதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்படுகின்றது.
எனவே ஏன் இத்திருத்தத்தை SLMC தடுக்க வேண்டும் ?
vote bank talk now
ReplyDelete"நான் பேச வேண்டிய இடத்தில பேசுவேன்" என்றால் உங்களுக்கும் அமைச்சர் அதாஉல்லா வுக்கு எந்த வித்தியாசமும் இல்லை அவரும் அதனை தான் சொல்லுகிறார்- நீங்களும் அதனை தான் சொல்லிகிறீர்கள் - செய்கிறீர்கள்.
ReplyDeleteசொல்லுங்கள் 2 பேரும் ? எது பேச வேண்டிய இடம்??
நீங்கள் கல்முனை இல் ஒரு கதை மடவளை இல் இன்னொரு கதை
கிண்ணியாவில் ஒரு பேச்சு Colombo இல் இன்னொரு பேச்சு அமைச்சரவையில் வேறொரு பேச்சு ஜனாதிபதி இடம் வேறு மாதிரியான பேச்சு.
நீங்கள் Lawyer என்பதை அடிக்கடி நிருபிக்கிறீர்கள்.
பேச வேண்டிய இடம் : அமைச்சரவை, பாராளுமன்றம்.
ReplyDeleteஅங்கே பேசினீர்களா?
வேண்டாத பெண்டாட்டியை நீங்கள் கைவிடுவதும் பின்பு ஓடிவந்து சேர்வதும் புதிதா என்ன?
ReplyDeleteஅதுபோகட்டும், ஒரு தேர்தல் சமயத்தில் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலிலே மு.கா. வேட்பாளர் உபைத்துல்லாஹ்வுடன் மரணமடைந்த 20க்கு மேற்பட்ட மூதூர் முஸ்லீம்களை ஞாபகமிருக்கின்றதா? அத்தனை பெருந்தொகையான உயிர்த்தியாகம் செய்த மூதூர் மக்களுக்கு இதுவரை உருப்படியாக ஏதாவது செய்திருக்கின்றீர்களா அமைச்சர் அவர்களே?