மதவாத தீயை ஏற்படுத்த உதவிவரும் அமைச்சர்கள் அதை நிறுத்தவேண்டும் - அமைச்சர் வாசு
நாட்டில் உள்ள அமைச்சர்களில் 50 வீதமான அமைச்சர்களே நேர்மையானவர்கள் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்து்ள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களுகளில் நாட்டிற்குள் இனவாதம் மற்றும் மதவாத தீயை அணைப்பதற்காக நேர்மையாக முயற்சிப்பவர்கள் 50 வீதமானவர்களே.ஏனையவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டிற்குள் பிளவு ஏற்றுபடுத்த நினைப்பவர்களே என அமைச்சர் தெரிவித்து்ள்ளார்.
அத்துடன் வேறு சில அமைச்சர்கள் இனவாத, மதவாத செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அதற்கு ரகசியமான முறையில் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
இருப்பினும் இவர்கள் தமது இனம் மற்றும் மதம் தொடர்பில் கொண்டுள்ள குருட்டுத்தனமாக பக்தி காரணமாவே அவர்கள் அவ்வாறு செய்யப்பட்டு வருகிறார்கள்.
இது நாட்டிற்குள் தேவையற்ற வன்செயல்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே நாட்டில் இன மற்றும் மத வாத தீயை ஏற்படுத்த தாம் தெரிந்தோ தெரியாமலோ உதவி வரும் அமைச்சர்கள் அனைவரும் தற்போதாவது அவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும் என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
.jpg)
yes thank you minister
ReplyDeleteLeftists nationalists created this but at least now it's not too late
ReplyDeleteto douse it.Not 50%,nearly 75% are now racists.It could be
around 40% in UNP.