Header Ads



புல்மோட்டையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை சூறையாடும் பிக்குகள் (படம்)


(அன்வர் - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

புல்மோட்டையில் அண்மைக்காலமாக படையினரால் காணிகள் சுவீகரிக்கப்பட்ட அதே வேளை இன்று மீண்டும் புதிதாக வந்துள்ள பௌத்த குருமார்களால் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்படையினரால் பொதுமக்களுக்கு சொந்தமான ஆதாரமுள்ள,ஆதாரமற்ற காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக (நெகப்) நிறுவனத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட 05 வீடுகளில்; குடியிருந்த மக்களை கடற்படையினர் வெளியேற்றி விட்டு கம்பி வேலியிட்டு தடுத்தி நிறுத்தியுள்ளார்கள்.

இது விடயமாக  அரசாங்க அதிபர், பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலம மற்றும் மாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒப்படைக்கப்பட  வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டு கடற்கடையினருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் ஒப்படைக்கப்படவில்லை. மேலும் முகத்துவாரம் வீதியில் பத்து வருடங்களுக்கு மேலாக பயிர் செய்து வந்தவர்களை வெளியேற்றி விட்டு அவர்களது காணியில் புத்தர் சிலை வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு படையினரின் செயற்பாடுகள் தொடராக இடம் பெறும் அதே வேளை அரிசி மலையில் புதிதாக ஹம்பாந்தோட்டையில் இருந்து வருகை தந்த பௌத்த மதகுருவொருவர் 500 ஏக்கர் காணி தங்களது விகாரைக்;கு தேவையென கூறி பொதுமக்களுக்கு சொந்தமான ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட உறுதிக்காணிகள் மற்றும் ஒப்பக்காணிகள் மேலும் 2008ம் ஆண்டு ஒப்பத்திற்கு விண்ணப்பித்து ஒப்ப அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் உள்ளடங்களாக இன்னும் தோட்டங்கள் செய்து குடியிருந்து வருகின்றவர்களின் காணிகளும் இன்று நிலஅளவையாளர்களைக் கொண்டு  அம்மதகுரு அளவை செய்து காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையானது கிராமத்தவர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இவ்வாறு இருக்க 14ம் கட்டை மாலானூர் பகுதியில் 01ஏக்கர் நிலப்பரப்பு ஜோகா மண்டபம் அமைப்பதற்கு என்று தம்புள்ளையில் இருந்து வந்த பௌத்த குருவொருவருக்கு வழங்கபட்டது. ஆனால் அவர் மேலதிகமாக 10 ஏக்கர் மக்களுடைய விவசாய நிலத்தை பலவந்தமதாக பிடித்து அடைத்து பௌத்த விகாரை அமைத்துள்ளார்.

இவ்வாறு முஸ்லிம்கள் 95வீதமாக செறிந்து வாழுகின்ற பிரதேசத்தில் தொடர்ச்சியாக காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உண்மையில் இந்நடவடிக்கைகள் அணைத்தும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சகோதர்களை குடியேற்றுவற்கான திட்டமாகவே பொது மக்களால் கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. Our politicians are very worst, They are working for the government for a piece of born.
    President Mahinda Rajapaksa is not a President of Sri Lanka now but some Monks and Buddhidts Bikkus do President's duty.
    They order and do some unwanted and nuisance thinks and activities as they like, but president shake his head as it's correct.

    ReplyDelete

Powered by Blogger.