'மற்ற சமயங்களை இழிவுபடுத்துவது கூடாது என புத்தர் மிக வலுவாக நம்பினார்'
சமய வேறுபாடுகள் என்பது ஒரு புதிய தோற்றமல்ல. இது மனித இனத்தின் நீண்ட வரலாறு போன்றே தொன்மையானது. ஒரே பிராந்தியத்துக்குள்ளும் ஒரே கலாசாரத்துக்குள்ளும் பல்வேறு சமய நம்பிக்கைகளும், சமயங்களும், ஆதரவாளர் குழுக்களும் தற்போது காணப்படுவது போன்றே முற்காலத்திலும் காணப்பட்டன.
சிலபோது சமய வேறுபாடுகள் காரணமாக ஏற்பட்ட முறுகல்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காவுகொண்டதோடு எண்ணிலடங்கா பெறுமதியான உடமைகளையும் அழித்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
சமய வேறுபாடுகள் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவுகளுக்குள்ளும் யுத்தங்களைத் தோற்றவித்துள்ளன. சமய வேறுபாடுகள் தமக்குப் பாதகமானது எனக்கருதியவர்களால் இப்பூமியில் இருந்து பல கலாசாரங்கள் தயவுதாட்சண்யமின்றி அழித்தொழிக்கப்பட்டுள்ளன.
சமய வேறுபாடுகள் அபாயகரமாக மாறுவது ஒருவர் அதனை தனக்கு சாதகமானதும் இயற்கையானதுமான விடயமாகப் பார்க்காது தனக்குப் பாதகமானது அல்லது எதிரியாகப் பார்ப்பதினாலாகும.; சமய வேறுபாடுகளை சிறந்த முறையில் நோக்கினால் அது ஒரு அழகானதும் மனித குலத்துக்கு நலவானதும் அனுகூலமானதும் உதவக்கூடியதாகவும் காணலாம். இதுவே எல்லா சமயங்களினதும் குறிக்கோளும் ஆகும்.
எல்லா சமய போதகர்களும் தமது சக மனித இனத்தினது நன்மையைப்பற்றியே அக்கறையாகவுள்ளனர்;. எந்தவொரு சமயமும் மனிதர்களுக்கு எதிராக செயற்படவோ, முரண்பாடுகளை ஊக்குவிக்கவோ, போட்டா போட்டிகளை ஏற்படுத்தவோ போதிப்பதில்லை.
சமயங்களின் ஸ்தாபகர்களின் குறிக்கோள்களை சரிவரப் புரிந்துகொள்ளாத அளவுக்கதிக ஆர்வம் கொண்ட அல்லது அர்ப்பணிப்புக் கொண்டவர்களே சமய வேறுபாடுகளை ஒரு பிரச்சினையாக மாற்றுவதற்கு காரணமாகவுள்ளனர். இவர்களின் செயற்பாடுகளே முரண்பாடுகளை உற்பத்தியாக்குவதற்கும் மனக்கிளர்ச்சி மற்றும் தீவிரவாத உணர்ச்சி போன்றவற்றிற்குத் தூபமிடவும் உதவுகின்றது.
சமய வேறுபாடுகளை நேரியமுறையில் நோக்கி அதனை மனித குலத்தின் ஒற்றுமைக்குப் பாவிக்க முடியாமல் உள்ள நிலையானது சமய வேறுபாடுகளை மிகவும் எளிதில் எரியக்கூடிய ஆபத்தான நிலையாகப் பார்க்க பலரைத் தூண்டியுள்ளது. ஆனால் இந்நிலைப்பாடு உண்மையில்லை. உண்மையை சந்தேகத்திற்கு இடமின்றி பின்வரும் உதாரணங்கள் மூலம் என்னால் நிரூபிக்க முடியும்.
பௌத்த சமயத்தின் தோற்றத்தின் பின்னரேயே இலங்கை ஒரு ஒன்றிணைந்த நாடாக அபிவிருத்தியடைய ஆரம்பித்தது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
இலங்கையின் ஆட்சியாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பௌத்த சமயத்தின் மூலம் பல்வேறு சமய நம்பிக்கைளுடன் பிரிவுகளாக வாழ்ந்த மக்களை முழுமையாக ஒன்றிணைத்தனர். இந்த ஒன்றிணைக்கும் மையமாக புத்த சமயம் விளங்கிய போதும் ஏனைய சமயங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இலங்கை, புத்தசமயத்தின் தோற்றத்தைத் தொடர்ந்து கலாசாரம், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் மிகவும் உச்ச நிலைக்கு உயர்ந்தது.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இப்போக்கை ஆரம்பித்து வைத்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற பேரரசன் அசோக சக்கரவர்த்தி எனக் கூறமுடியும். அவருக்கு குறிப்பிட்ட ஒரு சமயத்துடன் விருப்பு இருந்த போதிலும் அவர் சமயங்களின் வேறுபட்ட தன்மைகளை மதித்தார். அவர் சமயங்களின் கூட்டை சக்தி வாய்ந்த, ஒட்டிப் பிணைந்த ஒரு சக்தியாகக் கண்டார். எனவே அவர் மக்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க உதவக்கூடிய சமயங்களில் காணப்பட்ட நல்லம்சங்களைத் தேர்ந்தெடுத்தார். அவர் நாடுகளை யுத்தங்கள் மூலம் வென்றெடுக்கும் சம்பிரதாய வழமைகளைக் கைவிட்டார். அதற்குப் பதிலாக சமயங்களில் காணப்பட்ட சமாதானச்செய்திகளை உள்வாங்கிய தனது நேர்மையான ஆட்சி மூலம் தனது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கான ஆதரவைப் பெற்றார்.
அவர் சமயங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை மதிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். மக்கள் தமது சமயத்தை புகழ்ந்து கொண்டு ஏனைய சமயங்களை இழிவுபடுத்திக் கருத்து வெளியிடுவதைத் தடுத்தார். இச்செய்தியை அவர் கல்வெட்டுகளில் செதுக்கி மக்கள் பார்வைக்கு வைத்தார். இதில் 'தனது சமயத்தைப் புகழ்ந்து ஏனைய சமயங்களை இழிவு படுத்துபவர்கள் தமக்குத் தெரியாமலேயே தமது சமயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் அவர் சமய அடிப்படைவாதத்தை நேரடியாக நிராகரித்துள்ளார்.
கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கும் சாட்சியங்களும் இந்தக் கருத்துக்களை ஆதரிக்கின்றன. இந்நாடுகளில் புத்த சமயமே மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக விளங்கியது.
கொரியாவில் புத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்டபோது அங்கு முழபரசலழஇ Pயஉமஉhநஇ ளூடைடநள எனும் மூன்று சிற்றரசுகள் யுத்தத்தில் மூழ்கியிருந்தன. புத்த சமயம் இந்த மூன்று நாடுகளையும் ஒன்றிணைத்ததனால் கொரியா படிப்படியாக அபிவிருத்தியடைந்து ஒரு வல்லரசாக மாறியுள்ளது.
ஜப்பான் நாடு முன்னர் பல பிரிவுகளாகப் பிளவுபட்டு ளுழபயஇ ஆழழெடிநஇ யேமயவழலெ எனும் பல பலம் வாய்ந்த கோத்திரங்களைக் கொண்ட நாடுகளாகக் காணப்பட்டது. புத்தசமயம் இக்கோத்திரங்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளை நீக்கி சமாதானத்திற்கு உதவியது. இந்தியாவின் அசோக சக்கரவர்த்தியின் சமகால ஜப்பான் பேரரசனாக விளங்கிய ளூழவழமர வுhயiளாi என்பவர் புத்த சமயத்தை முழுமையாகப் பாவித்து ஜப்பான் மக்களிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தினர்ர்.
மேற்கூறிய மூன்று சந்தர்ப்பங்களிலும் புத்த சமயம் ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக விளங்கியது. இதற்குக் காரணம் புத்த சமயத்தின்; ஒன்று சேர்க்கும் சிறப்பியல்பு ஆகும்.
ஒருவர் தனது சமயத்தில் கண்மூடித்தனமாகத் தொங்கிக்கொண்டு மற்ற சமயங்களை இழிவுபடுத்துவது கூடாது என புத்தர் மிக வலுவாக நம்பினார். ஒருவர் சொல்வது எல்லாம் சரி எனவும் மற்றவர் சொல்வது எல்லாம் பிழை எனவும் கூறுவதை புத்த சமயம் ஆதரிக்கவில்லை. அப்படியான சுபாவமே சமய அடிப்படை வாதத்திற்கான காரணமாகும். இந்த அடிப்படை வாதமே சமய வேறுபாடுகளைப் பார்த்து மதிப்பதிலிருந்தும் வேறுபட்ட சமய சிந்தனைகளிலுள்ள வசீகரங்களைப் பார்ப்பதிலிருந்தும் கண்களை மறைக்கின்றன.
ஓர் சமயத்தைப் பின்பற்றுபவர் ஒரு அடிப்படைவாதியாக இருக்கத்தேவையில்லை. அடிப்படைவாதம் உண்மையை மறைக்கின்றது, பார்வையை மட்டுப்படுத்துகின்றது, மனக்கிளர்ச்சிகள் மூலம் வழி நடாத்தப்படுகின்றது. மனக்கிளர்ச்சி மூலமான செயற்பாடுகள் மிகவும் ஆபத்தான தீ பற்றியெரியக்கூடிய மனம்போனபடியான தாறுமாறான செயல்களில் இறங்கத் தூண்டும்.
ஒருவருக்கு மனதில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் பிரித்தறியும் அறிவை உள்ளடக்கிய புத்திசாலித்தனத்தை கைவிடக் கூடாது. இ
ஒருவருக்கு மனதில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் பிரித்தறியும் அறிவை உள்ளடக்கிய புத்திசாலித்தனத்தை கைவிடக் கூடாது. இது எல்லா சமய போதகர்களாலும் ஊக்குவிக்கப்படும் ஒரு நடைமுறையாகும். புத்தர் இந்த நடைமுறையை மிக வெளிப்படையாக நிலை நாட்டினார். அவருடைய நோக்கம் வெறுமனே ஒருவரை மதமாற்றம் செய்வதல்ல. ஆனால் அவர்களே பார்த்து அறிவதற்கு உதவி செய்தல் ஆகும்.
வௌ;வேறு சமய போதகர்கள் தமது போதனைகள் சரியெனவும் ஏனையவை பிழையெனவும் கூறுவதைச் செவிமடுத்து மனக்குழப்பமடைந்திருந்த மக்களுக்கு புத்தரின் பிரபலமான பிரசங்கமான 'காலாம சுத்த' வில் புத்தர் தனது போதனை சரியானது எனச் சொல்லவில்லை. மாறாக எந்தப் போதனை மிகப் பிரயோசனமானது என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறைகளைச் சொன்னார். சமயங்கள் தொடர்பாக இவ்விதமான திறந்த மனத்துடனான இலக்குகளை அடையும் போக்கு தற்கால நவீன சமூகங்களுக்கு தேவையாகவுள்ளது.
உலகம் சுருங்கி பூகோளக் கிராமமாக மாற்றமடைவதை நாம் காண்கின்றோம். இவ்விதமாக மாற்றமடைந்துவரும் பூகோளக் கிராமத்திற்குள் நாம் சமய வேறுபாடுகளுடனேயே வாழவேண்டியுள்ளது. சமய வேறுபாடுகளை நாம் விளங்கிக் கொள்ளாதபோது அதனை நாம் எமக்கு விரோதமானதாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அடுத்த கட்டமாக நாம் அதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சமயங்கள் உடைந்த துணிக்கைகளாக மாற வேண்டி வரும். சமய வேறுபாடுகள் தொடர்பாக இதுவே தற்காலத்தில் சில பகுதிகளில் நடந்து வருகின்றது. இவ்வகையான எதிர் தாக்குதல்கள் நிச்சயமாக மிகவும் அழிவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் தற்கொலைக்குச் சமமானதாகவும் அமையும்.
தற்கால பூகோள அமைப்பில் நாங்கள் விரும்;பினாலும் விரும்பாவிடினும் வேறுபாடுகளை வேறுபாடுகளாகவே நோக்க வேண்டியுள்ளது. நவீன சமூக அமைப்பு பல் கலாசார, பல் சமய எனக் கூறப்படும்போது நாங்கள் கோபப்படக்கூடாது. இவையாவும் தற்காலத்தில் மட்டுமல்லாது எமது நீண்ட வரலாற்றிலும் காணப்பட்ட யதார்த்தமான நிலையாகும். இனிமேலும் மக்கள் ஏனைய கலாசாரங்களினதும். சமயங்களினதும், தாக்கங்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனிமையில் வாழ முடியாது.
இதில் என்ன பிழை உள்ளது? வேறுபாடுகளுக்குள் வாழும்போதும் ஒருவர் தனது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது சமய, நம்பிக்கை ஆகிய வேறுபாடுகளுக்குள்ளும் பொருந்தும.; ஆயினும் இது பிரச்சினைக்குள்ளாவது ஒருவர் தனது சமயத்தை அல்லது நம்பிக்கையை தனது உள்ளத்திற்குள் வைக்காது தலையில் வைத்தலையும் போதுதான். தலையில் சமயத்தை வைத்தலைவது என்பது வெளிப்பகட்டுக்காக அல்லது விளம்பரத்திற்காக சமயத்தைப் பின்பற்றுவதாகும். இந்த நடைமுறை அடிப்படைவாதிகளுடன் ஒத்துப்போகக்கூடியது.
நாங்கள் இதனைச் சரிவர செய்யாவிடின் சமாதானமும் நல்லிணக்கமும் நிறைந்த உலகைப்பற்றிய எமது எதிர்பார்ப்புகள் ஒரு கனவாக மட்டுமே இருக்கும். சிலபோது கனவுகூட இல்லாமல் ஒரு கற்பனையாக மட்டுமே இருக்கும். எனவே நாங்கள் அடிமட்ட யதார்த்தங்களைப் புரிந்தவர்களாக விழித்தெழவேண்டும்.
எல்லா சமயத்தவர்களும் உள்நோக்கங்கள் எதுவுமில்லாமல் திறந்த மனதுடன் செயற்படவேண்டும். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் 'வாழு வாழ விடு' எனும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். சமயங்கள் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான ஆயுதங்களாகப் பாவிக்கப்பட வேண்டுமே தவிர அவை சமாதானம். புரிந்தணர்வு, நம்பிக்கை போன்றவற்றை அழிக்கும் ஆயுதங்களாகப் பாவிக்கப்படக் கூடாது.
சமயம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயம். ஓவ்வொருவருக்கும் அவர் விரும்பும் சமயத்தைக் கடைப்பிடிக்கும் உரிமையுண்டு. ஒரு சமயத்திற்கு சேவையாற்றுவது என்பது அச்சமயத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதாகும். எல்லோருக்கும் ஒரு சமயமே இருக்க வேண்டும் என்று எந்த சமயப் போதகரும் கூறியதில்லை.
சமயங்கள் என்பது அதனைப் பின்பற்றுவோரின் மகிழ்ச்சி மற்றும் நன்மைக்காக அச்சமயப் போதகர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட முயற்சிகளின் பலனேயாகும். எனவே ஏன் சமயத்தை விசனம், துக்கம், முரண்பாடு போன்றவற்றின் ஊற்றாக ஆக்கவேண்டும.;.
புத்த சமயம் அதனைப் பின்பற்றுபவர்களுக்கு நட்பு, கருணை, பிறர்;நலனில் மகிழ்ச்சி, சாந்தமான மனநிலை ஆகியவற்றை வளர்த்து எல்லோருக்கும் பரவச் செய்யுமாறு அறிவுரை கூறுகின்றது. சாந்தமான மன நிலையானது எல்லாவற்றையும் குறிப்பிட்ட இலக்குடன் நோக்கி பக்கசார்பில்லாமல் நல்லதை மதிக்கவும் கெட்டதைப் புறந்தள்ளவும் இயலுமாக்குகின்றது. இந்த வகையான ஞானம் ஊடாக அறிவுடை நிலையை நாங்கள் பின்பற்றுவதன் மூலம் முரண்பாடுகளும் மோதல்களும் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும.;
இதுவே வேறுபாடுகள் நிறைந்த உலகில் சமாதானமான சகவாழ்வுக்கான வழியாகும். நாங்கள் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ விரும்பினால் இதுவே அதற்கான ஒரே ஒரு தேர்வு ஆகும்
ஆக்கம்:
பேராசிரியர் பெல்லன்வில விமலரதன அனுநாயக தேரர்
தமிழ் மொழிபெயர்ப்பு :
டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல்,
.jpg)
Post a Comment