ஹஜ் விவகார கோட்டாவில் ஊழல் வேண்டாம் - பிரதம நீதியரசர்
(அஷ்ரப் ஏ சமத்)
ஹஜ் கோட்டா பகிர்வில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு இன்று (30)ஆம் திகதி பிரதம நீதியரசா குழுவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ் வழக்கினை பாதிக்கப்பட்ட 30 ஹஜ் முகவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான ஜே.சி. வலியமுன, மற்றும நிசாம் காரியப்பரும் வாதிட்டனர்.
மேற்படி ஹஜ் கோட்டா பகிர்வு மற்றும் ஹஜ் விசா ஆகிய தகவல்கள் அடங்கிய தஸ்தாவேஜூகள் கடந்த ஜூலை 8ஆம் திகதியே குறிப்பிட்ட திகதிக்கு ஜித்தாவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இதில் ஏதும் மாற்றங்கள் செய்ய முடியாது. இதில் நிர்வாக்ச சிக்கல்கள் ஏற்படும் எனவும் அரச சட்டத்தரணிகளால் தெரவிக்கப்பட்டது.
இதனை கருத்திற்கொண்ட பிரதம நீதியரசர் அடுத்து வரும் ஆண்டு இவ்வாறானதொரு மோசடிகள் இடம்பெறக்கூடாது. அடுத்து வரும் ஆண்டில் ஹஜ் பற்றிய பகிர்வில் 2012ல் உள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பான கிரிட்ரீயா முறை பின்பற்றப்படல் வேண்டும். அடுத்த வருடம் ஹஜ் கோட்டா முறையிலும் யாரும் தலையிடுவதாயின் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக அதி தீவிர சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மிகவும் எச்சரித்து இத் தீர்பினை வழங்குவதாக நீதியரசர் தெரிவித்தார்.

veettukku veedu wasalpadi.ellorum moasadikkararhalthaan
ReplyDelete'அப்பாடா... இந்த வருடம் தப்பித்துக் கொண்டோம். நம்ம தொழிலுல மண் விழல்ல...'
ReplyDelete'அடுத்த வருஷம்... அத அடுத்த வரும் பார்ப்போம்..'
'நீதிபதியை மாற்றியென்றாலும் நாம் நினைத்ததைச் சாதிப்போம்' என்று சவால் விட்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நம்ம அரசாங்கத்தில இருக்கிற வரைக்கும் நாம நீதிபதிகளப் பத்திக் கவலையே படத் தேவல்ல..'
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-