Header Ads



விபத்தில் பொலிஸ் பரிசோதகர் வபாத்

(அப்துல்லாஹ்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டானில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றும் ஏறாவூரைச் சேர்ந்த மீராஸாஹிப் பௌசுல் அமீர் என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி மரணித்தவராகும்.

இன்று 30-07-2013 பிற்பகல் 2.30 மணியளவில் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியருகே இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகப் மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்புப் பொலிஸார் இந்த விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.