Header Ads



அம்பாறை முஸ்லிம்களின் பெருநாள் ஏற்பாடுகளும், கவலைதரும் சம்பவங்களும்..!

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

புனித ரமழான் மாதத்தின் கடைசிப்பத்தில் நுழைந்துள்ள இவ்வேளையில் நம்மில் பலர் மீதமாக உள்ள நாட்களை இறைவனின் திருப்தியையும் புனித லைலதுல் கத்ருடைய நன்மைகளையும் அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாது பெருநாள் தினத்திற்காக ஆடைகளையும் இதர பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இக்காட்சிகளை பொதுவாக அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் காணக்கூடியதாக உள்ளது பெருநாள்  தினத்திற்காக ஆடைகளைக் கொள்வனவு செய்யத்தான் வேண்டும் ஆனால் அவை நமது இபாதத்களுக்குத்தடையாக இருந்து விடக்கூடாது. ஆனால் பார்ப்பதற்கு நிலைமை அவ்வாறு தென்படவில்லை.

குடும்பத்தலைவர்கள் வேண்டுமானால் இபாதத்களில் ஈடுபடலாம் ஆனால் பெரும்பாலான குடும்பத் தலைவிகளும் பெண் பிள்ளைகளும் இரவு பகல் பாராது கடைத்தெருக்களில் நேரகாலத்தை வீணாக்கி அலைந்து திரிவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அதிலும் பெரும்பாலானோர் நோன்புக்கு வழங்க வேண்டிய கண்ணியத்தையும் கௌரவத்தையும் வழங்காது ஆள்பாதி ஆடைபாதி கோலங்களில் ஏனைய நோன்பாளியின் நோன்புகளையும் பாழாக்கும் வகையில் காட்சியளிப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

கடைசிப்பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் புனித லைலதுல்கத்ருடைய நாளை அடைந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்க எதிர்வரும் நாட்களில் புனித லைலதுல்கத்ரை அடைந்துகொள்ள நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். இதில் குடும்பத்தலைவர்களின் பொறுப்பு மிகப்பிரதானமானதாகும். ஆயிரம் மாதங்களைவிடச்சிறந்த இந்நாளை அடைந்துகொள்ள சகலரும் முயற்சிக்கவேண்டும். 

பெருநாள் நெருங்கிவரும் இவ்வேளையில் நமது கவனங்களை முழுக்க முழுக்க அதற்காக வழங்கி ஷைத்தானின் வலையில் விழுந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகாமல் மீதமாக உள்ள நாட்களில் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது நல்அமல்கள் செய்து புனித லைலதுல் கத்ருடைய இரவை அடைந்து கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்கவேண்டும்.

8 comments:

  1. "அம்பாறை முஸ்லிம்கள்..." என்று குறிப்பிட்டுச் சொல்வது மிகவும் வருந்தத் தக்கதாகும். பொதுவாக மார்க்க விழுமியங்களைப் பேணுவதில் ஏனைய பகுதி முஸ்லிம்களை விட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதை சகோதறரருக்கு அறியத் தருகின்றேன் (குறிப்பு:நான் கிழக்கு மாகாணத்தில் 4 வருடம் கல்வி கற்ற அனுபவத்தில் இவற்றை உறுதியாக கூறுகின்றேன்)

    ReplyDelete
  2. This is very BAD information. Roshi nova thanks for you.

    ReplyDelete
  3. go and see Sainthamaruthu and Kalmunaikudy............. you know the people what there are doing...................he is correct.!

    ReplyDelete
  4. Only almighty Allah will know everything but you are defeneatly not.
    so, stop each and everyone to debate among you now.

    ReplyDelete
  5. சொல்லப்பட்ட விடயம் தேவையானதும் சரியானதுமாக இருந்தாலும் இடப்பட்ட தலைப்பு பொருத்தமற்றது...

    ReplyDelete
  6. தலைப்பு பொருத்தம் இல்லத்தை போன்று இருக்கிறது. சொன்ன கருத்தை வரவேற்கிறோம். ஆனால் ஒரு இடத்தை மையப்டுத்தி சொல்லி இருப்பது வேதனைக்கு உரிய ஒரு விடயம். என்ன செய்வது இந்த தலைப்பு மாற்ற படுமா.

    ----- சிராஜ்தீன் சிறோ-------

    ReplyDelete
  7. அம்பாறை பக்கமே வராத எமது நிறைய சகோதரர்கள் வெளி மாவட்டங்களில் உண்டு. இவ்வாறான செய்திகளை வாசிக்கும் போது அவர்களின் மனதில் அங்கு வாழும் அனைவரும் அவ்வருதானோ?? என்ற மனப்பதிவு ஏற்படலாம். அதனால்தான் இத்தலைப்பை மீள்பரிசீலனை செய்யவேண்டி உள்ளது. இங்கு குறிப்பிடப்படும் தவறு நாடு பூராகவும் நிகழ்வதால் Jaffna Muslim இதனை ஒரு பக்கம் சாடாமல் தடுக்குமா ?? please review every article before publish in this site....

    ReplyDelete

Powered by Blogger.