ரவூப் ஹக்கீமின் கூட்டில் சேருவது வடமாகாண முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகமா..?
(வன்னி விடுதலையான்)
இன்றைய ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் உமர் அலி முஹம்மத் இஸ்மாயில் என்ற சகோதரர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து எனது பார்வையும் சிந்தனையும் அதன் பக்கம் சென்று திரும்பிய நிலையில் சில புரிந்து கொள்ள முடியாத உண்மைகளை உமர் அலி ஊடக வாசக நெஞ்ஞங்களுக்கு வழங்குவது பொருத்தம் என்று என்னி இதனை பிரசுரத்திற்காக அனுப்புகின்றேன்.
சகோதரர் உமர் அலி அவர்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஒரு கதையினை வெளியிட்டுள்ளார்.இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள சில வேண்டத்தகாத சம்பங்கள் தொடர்பில் இவர் அறிந்திருந்த போதும், வடமாகாணத்தின் யதார்த்தம், தற்போதைய சூழ் நிலை குறித்து இவரால் சரியாக அறிந்துகொள்ள முடியாத நிலையிலேயே இந்த அறிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார் என்று என்னத் தோன்றுகின்றது.
அமைச்சர் றிசாத் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்து பேசுவதாக இருந்த போதும், அந்த சந்திப்புக்கான சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் எற்படுத்தி கொடுக்கவில்லை. வடமாகாண சபை தொடர்பில் தமது கட்சி தனித்து போட்டியிடுவதற்கான தீர்மானத்தை எடுத்ததன் பிறகு தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு போட்டியிடுவோம் என்று அறிக்கையினை வெளியிட்டிருந்தது. எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அப்பால் செல்ல ஒரு போதும் முஸ்லிம் காங்கிரஸ் விரும்பாது அதனடிப்படையில் தலைமைத்துவத்துடனான பேச்சுக்கள் சாத்தியமற்றது என்பதை அமைச்சர் றிசாத் புரிந்து கொண்டார்.
வடக்கினை பொருத்த வரையில் இன்று வடக்கு முஸ்லிம்கள் அல்லாஹ்வின் துணையுடன்,தற்போதைய அங்கிருக்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோரின் அரசியல் பலத்துடன் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்பதை கூறித்தான் ஆக வேண்டும். வடக்கில் முஸ்லிம்களை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற உறுதியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும்,சில பெரும்பான்மை அரச அதிகாரிகளும் கங்கனங்கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ள நிலையில் அவர்களை பாதுகாக்க முன்வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சர் றிசாத் அழைப்புவிடுத்த போதும்,அதற்கு பதிலளிக்காத அமைச்சர் ரவூப் ஹக்கீம்,இந்த மாகாண சபை தேர்தலிலா அமைச்சர் றிசாத்துடன் கூட்டணி வைக்கப் போகின்றார் என்ற கேள்வி தானாக எழுகின்றது.
வடக்கில் இந்திய அரசு வீடமைப்பு திட்டத்தை நடை முறைப்படுத்திய போது,அதில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாகவும்,இந்திய அரசுக்கு இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை அனுப்ப முயற்சித்த போது,தமிழ் தேசிய கூட்டணியினை பகைத்துக் கொண்டு தன்னால் செயற்பட முடியாது என்று கூறினார்.சரி அது பராவயில்லை அப்படியென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு ஒரு கடிதத்தை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் செயற்படுவது குறித்து கடிதம் ஒன்றை அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடிதமொன்றை அனுப்ப கையொப்பமிட்ட போது,அதற்கும் தான் உடன்படப் போவதில்லை என்று கூறினார்.வடக்கு முஸ்லிம்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிமைகளாக இருக்க வேண்டும்,அத்தோடு முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழைக்கும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுத்தால்,தமமடன் நெருக்கமான உறவை வைத்துள்ள நிதி உதவிகளை செய்யும் சர்வதேச நிறுவனங்கள் பகைத்துவிடும் என்பதினால் தானா அதனையும் தட்டிக்கழித்து விட்டதை நினைவுபடுத்த வேண்டும்.
இன்று வடக்கில் எற்பட்டுள்ள சூழ்நிலையானது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை நோக்கி நகர்வுக்கு தேவையானதை செய்யும் ஒன்றாக பாரக்காத அமைச்சர் ரவூப் ஹக்கீம்,அதிகாரமுள்ள அரசாங்கத்தின் பங்காளி என்று கூறிக் கொண்டு வடக்கில் அரசாங்கத்தை தோற்கடித்து,தமிழ் தேசிய கூட்டணியினை வெற்றி பெறச் செய்யும் வேலையினை ஆரம்பித்துள்ளது தான் அவரது தனித்து போட்டியிடும் வல்லமையாகும்.மத்தியில் மஹிந்த அரசு நல்லது, அதற்குள் இருந்தால்தான் முஸ்லிம்களை பாதுகாக்க முடியும் என்று கூறிக்கொண்டு, மாகாண சபையில் முஸ்லிம் பிரதி நிதித்துவம் இருக்கக் கூடாது என்பதில் கண்ணில் எண்ணையினை ஊற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தோல்வியையும்,முஸ்லிம் சமூகத்தினது உரிமை மற்றும் அபிலாஷைகள் என்பனவற்றை பெற்றுக் கொடுக்க முடியாத துரதிஷ்டமான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கூட்டில் சேருவது என்பது அமைச்சர் றிசாத் பதியுதீன் வட மாகாண முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.
இந்த வரலாற்று தவறை அமைச்சர் றிசாத் செய்யக் கூடாது என்பதில் வடமாகாண முஸ்லிம்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், துறை சார்ந்தவர்கள் என்றும் பலரும் அமர்ந்திருந்து எடுத்த முடிவு தான் மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சியின் பக்கம் தமது பேரம் பேசும் சக்தியினை காட்டுவதற்கு இந்த தேர்தலில் யதார்த்தத்தின் அடிப்படையில் போட்டியிட அமைச்சர் றிசாதுக்கு கொடுகப்பட்டுள்ள அளுத்தமாகும்.இதனை புரிந்து கொள்ள முடியாது சகோதரர் உமர் அலி அவர்கள்,வடமாகாண முஸ்லிம்களின் முகவரியினை ஓடும் நீரில் எழுதிவிட்டார்கள் என்று கூறுவது,எவ்விதத்திலும் பொருத்தமற்ற வரிகளாகும்.வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளையும் பதிவுகளையும் கள்வெட்டுக்கலாக அமைச்சர் றிசாத் செதுக்கியுள்ளதை என் மறுபக்கம் பாரக்க மறுக்கின்றீர்கள் என்பது எம்மில் எழும் நியாயமான விமர்சனங்களாகும்.
எனவே வடக்கு முஸ்லிம்களின் தேவை,இறுப்பு,பாதுகாப்பு,உரிமை சார் விடயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனில் வெறும் வெற்று எழுத்துக்களால் காயப்படுத்துவதைவிடுத்து,உணர்வுள்ள உயிரோட்டம் கொண்ட எழுத்துக்களால்செதுக்குவதற்கு ஒன்றினையுமாறு அன்போடு அழைப்புவிடுக்கின்னே்...!!

"ஏன் பிரிந்தோம்?" என்பதற்கான விளக்கங்களைப் பார்வையிடத் தொடங்கியுள்ள முஸ்லிம் சமூகம், எப்போது "ஏன் இணைந்தோம்'" என்பதற்கான விளக்கங்களை அறியுமோ..? யானறியேன் பரபரனே..!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Mr.Vanni Vidathalayan sariyana karuththukalai munn waithingal Rauff Hakeem Minister da sathanai ennum iruku
ReplyDeleteMannaril sinna pirachchinai onruku Mannar Muslimgalai thodarchchiyaka Police Arass paninangal Justice Ministeraha irunthawar oru kalvi kuda hatka villai
Rishad Bathirudeen Ministerai patri pasuwathadku yaruku arukathai ila ok
SHM
Musaliyan
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteவன்னி விடுதலையான் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
எனது கட்டுரைக்கு பதிலளிக்க வேண்டும் என்ற விடயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டதாக எனக்கு எண்ணத்தோன்றுகின்றது.நண்பரே வடமாகாணத்தில் நேரடிப் பிரசன்னம் மட்டும் இல்லை என்றாலும் ஏனைய நகர்வுகளை அறிந்தவர்களாகவே அநேகர் இருக்கின்றனர்.வட மாகாணத்தில் ரிசாத் செதுக்கிய சிற்பங்கள் யாவரும் நன்கறிந்த விடயம் ,அவர் அரசுடன் சேர்ந்துகொண்டு இருப்பதுக்கு நீங்கள் கூறும் நியாயங்களை மறுக்க முடியாத அதேவேளை நான் கேட்கும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள்.முஸ்லீம் காங்கிரஸ் 1500 வாக்குகளை எடுத்து அந்த 1500 வாக்குகளின் குறைவினால் அரசாங்க கூட்டு அணியிலே ஒரு முஸ்லீம் அங்கத்தவரது அங்கத்துவம் இல்லாமல் போனால் அதற்கு யார் பொறுப்பு.இருவரும்தானே?எந்தவகையிலாவது முஸ்லீம்கள் இணைந்திருக்க வேண்டும்,இணையாமல் போனது தவறு என்றே சுட்டிக்காட்டினே,இன்னமும் கூறுகின்றேன் தவறு என்று.
முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடிபணிந்து நடக்கின்றது என்றால் என் கிழக்கு மாகாண சபையில் அது அரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது?.
வன்னி உட்பட வடமாகாண மக்கள் தாங்கள் யாரை ஏற்றுக்கொள்ளப்போகின்றார்களோ அதுவே அவர்களது தலைஎளுத்தைத் தீர்மானிக்கும் என்று மீண்டும் உங்களுக்கு கூறுகின்றேன்..இதில் புதைந்துள்ள பொருளை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
நான் ரவூப் ஹக்கீமுக்கு வக்காலத்து வாங்கவோ ரிசாதுக்கு எதிர்ப்பாகவோ இந்த கட்டுரையை வரையவில்லை,வடமாகாணத்தில் இருக்கும் எனது இரத்தங்களான சகோதரர்களது விடுதலையின்பால் மோகம் கொண்டுதான் எழுதினேன்.தொடர்ச்சியாக எனது கட்டுரைகளை நீங்கள் வாசித்திருப்பீர்கள் எனின் இது புரிந்திருக்கும்.
மற்றும் இதுவரை முஸ்லீம் காங்கிரஸ் வடக்கு மக்களுக்கு செய்த சில அநியாயங்களை இங்கு குறிப்பிட்டிருந்தீர்கள் அச்செய்திகள் உண்மையாயிருப்பின் அதனை மக்கள் புரிந்து கொண்டு பதிலை தேர்தலினூடாக தெரிவிப்பார்கள்!
அல்லா வடமாகான முஸ்லீம் சகோதரர்களின் வாழ்க்கையில் நிம்மதியையும்,பாதுகாப்பையும்,சந்தொசத்தையும் ,அபிவிருத்தையயும்
கல்வியில் முன்நேற்றத்தையும் விரைவில் வழங்குவானாக.