14 மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு
(எம்.எம்.ஏ.ஸமட்)
இன்று (30.07.2013) பிற்பகல் 3 மணிக்கு தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு 14 மாவட்டங்களில் இடம்பெறுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவத்துள்ளது.
இதன் பிரகாரம், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய 14 மாவட்டங்களிலேயே இச் சுனாமி ஒத்திகை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வொத்திகை நிகழ்வின்போது, மக்கள் அனர்தத்துக்கு தயாராகும் மட்டங்களை அறிதல், அனர்தத்தின் உண்மைத்தன்மை மற்றும் அதற்குக் காட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அனாத்;தம் தொடர்பாக வழங்கப்படும் தகவல்கள், அது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதற்கான முக்கியத்துவம் தொடர்பாக பரிசோதித்தல் அத்துடன் குறுகிய காலத்துக்குள் அனர்த்தத்துக்கு முகம்கொடுப்பது தொடர்பான வழிவகைகளை அடையாளம் காணுதல் போன்ற பயிற்சிகள் ஒவ்வொத்திகை நிகழ்வின்;போது இடம்பெவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரினால் குறித்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள கிரமாங்களில் இவ்வனர்த்த ஒத்திகை நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

Post a Comment