உடுநுவர தஸ்கரை ஹக்கானிய்யா அறபுக் கலாசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
உடுநுவர தஸ்கரை ஹக்கானிய்யா அறபுக் கலாசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் தௌரதுல் ஹதீஸின் புஹாரி சரீப் பாட நிறைவு விழா என்பன எதிர்வரும் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அஸ்செய்ஹ் எம்.ஐ.ஏ.எம். ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் திருச்சி ஜாமிஆ அன்வாரில் உலூம் கலாசாலையின் முதல்வர் முப்தி முஹம்மத் ஹக் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இதில் சிறப்புப் பேச்சாளராக அஸ்செய்ஹ் எம்.எச்.எம். யூசுப் முப்தி அவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment