நோன்பு விடுமுறையிலும் டெங்கு ஒழிப்பை முன்னெடுக்க முஸ்லிம் பாடசாலைகளுக்கு உத்தரவு
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் நோன்பு கால விடுமுறையிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மாகாண கல்வித் திணைக்களம் முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
கண்டி நகரில் பிரபல பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய மாகாண சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிபர்கள் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் எதிர்வரும் நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளின் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகாதவாறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 51 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர். மேலும் இவ்வருடம் இதுவரை மூன்று பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்களில் முஸ்லிம் பிள்ளைகளின் எண்ணிக்கை கணிசமானளவானதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
Post a Comment