Header Ads



நீர்கொழும்பு புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதி - ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

நீர்கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றக் கட்டிடத்  தொகுதி நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினனால் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. 

பொது மக்கள் ஒரே இடத்தில் அனைத்து நீதிமன்ற அலுவல்களையும் நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு அனைத்து வசதிகளும் ஒருங்கமையப்பெற்றதாக இப் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  இதற்காக  786 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இப் புதிய கட்டிடத்தொகுதியில் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றவியல் மேல் நீதிமன்றம், இரு மாவட்ட நீதிமன்றங்கள் , இரு நீதவான் நீதிமன்றங்கள், இரு தொழில் நியாய சபைகள் , இரு சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள், காதி நீதிமன்றம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு மத்திய நிலையம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.  

அத்துடன், நன்நடத்தை அதிகாரி அலுவலகம், குடும்ப ஆலோசனை சேவை மையம், வங்கி, தபால் அலுவலகம் என்பனவும் இங்கு காணப்படுகின்றன.  இந்த வைபவத்தில் பாராளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, சட்டத்தரணிகள் ஆகியோர் உட்பட நீதியமைச்சின் அதிகாரிகளும் பங்குபற்றுவர். 

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர் 

1 comment:

  1. நீதி செத்தபின் எதற்கு நீதிமன்றங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.