தேர்தல்கள் திணைக்களத்தின் விளக்கம்..!
ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் சற்றுநேரத்திற்கு முன் தொடர்பை ஏற்படுத்திய பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் வழங்கிய விபரம் வருமாறு,
தேர்தல்கள் ஆணையாளர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களின் உணர்வுகளையும் நன்கு மதிப்பவர். முஸ்லிம் சகோதரிகள் நிகாப் உடை அணிந்து வருவார்களாயின், அவர்கள் மீது சந்தேகம் ஏற்படுமாயின் பெண் பொலிஸாரோ அல்லது உத்தியோகத்தரோ பரிசோதித்து ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வர்.
இது புதிய விதிமுறை அல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் அர்த்தம் நிகாப் ஆடையுடன் முஸ்லிம் பெண்கள் வாக்குப்போட தடை என்பது அல்ல.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவோ அல்லது தேர்தல்கள் திணைக்களமோ ஒருபோதும் இஸ்லாமிய வழிமுறைகளுக்கோ அல்லது முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலோ செயற்படாது எனவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment